YouTurn

இந்து மனைவியை முஸ்லிம் கணவர் அடித்ததாகப் பரவும் வதந்தி!

இந்து மனைவியை முஸ்லிம் கணவர் அடித்ததாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தான் எட்டி உதைத்த  தன் அப்பாவை இங்கு வந்த பிறகு இது மாதிரி சமயங்களில் அடிக்கடி நினைவு கூர்கிறாள். சில நாட்களுக்கு முன்பு பலர் அவளுடைய சுதந்திரமான செயலை ட்விட்டரில் நியாயப்படுத்த முயன்றனர். இது மதமாற்ற ஜிஹாத் என்ற போது நீங்கள் ஒரு வெறுப்பாளர் என்றும், நீங்கள் இந்து முஸ்லீம் பற்றி மதவெறி யுடன் பேசுகிறீர்கள் என்றும் பதில் சொன்னாள். இப்போது அவள் தனது கணவர் அப்துல் உடன் இரக்கமற்ற மதச்சார்பின்மையை அனுபவிக்கிறாள்,. மதச்சார்பற்ற நடுநிலை தகப்பன் மற்றும் சகோதரர்இதை கவனமாகப் பார்த்து விடுங்கள். அவள் தாதர் நைகானின் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்.


X link

விரிவான விளக்கம்

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை முஸ்லிம் இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டு, அவரை எப்படி அடித்துத் துன்புறுத்துகிறார் பாருங்கள் என வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



அந்த வீடியோவில் ஆண் ஒருவர் கட்டை கொண்டு பெண்ணை கடுமையாகத் தாக்குகின்றார். 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோவை 2023, ஜூன் 8ம் தேதி எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டு உத்தரப் பிரதேச காவல் துறையை டாக் செய்துள்ளார். அதற்கு இட்டாவா (Etawah) மாவட்ட காவல் துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், இச்சம்பவம் தொடர்பாக பகேவார் (Bakewar) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. 



இதனைக் கொண்டு தேடியதில், பஞ்சாப் கேசரி என்னும் தளத்தில் இது தொடர்பாக 2023, ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டிருந்த செய்தி கிடைத்தது. மனைவியைக் கட்டையால் அடித்த நபர் நஹரய்யா கிராமத்தைச் சேர்ந்த சிவம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



MSS NEWS 24X7 என்னும் யூடியூப் பக்கத்திலும் இது தொடர்பாக வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பேசிய அந்த வீடியோவின் தலைப்பில் ’கணவன் (சிவம் யாதவ்) மனைவியை (ஜோதி யாதவ்) அடித்தார்’ என்று உள்ளது. ‘Zee News’ தளத்தில் வெளியான செய்தியிலும் இதே பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றில் இருந்து இந்த வீடியோவில் கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. இதனை முஸ்லிம் கணவர் இந்து மனைவியை அடித்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர். 

மேலும் படிக்க : இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !

முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்கிற பெயரில் மத மாற்றம் செய்வதாக (லவ் ஜிகாத்) வலதுசாரிகள் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர். மேலும், திருமணத்திற்குப் பிறகு இந்து பெண்கள் தங்களது முஸ்லிம் கணவனால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகவும் பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. அந்த பொய் செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : டெல்லியில் பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் வீடியோ.. லவ் ஜிகாத் என வதந்தி !

முடிவு: 

முஸ்லிம் கணவன் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவில் உள்ள கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் கணவரைக் காவல் துறையினர் கைதும் செய்துள்ளனர். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க