YouTurn

'நியூயார்க்கில் ஏற்பட்ட வெள்ளம்' என்று பரவும் பழைய வீடியோ

'நியூயார்க்கில் ஏற்பட்ட வெள்ளம்' என்று பரவும் பழைய வீடியோ

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது நியூயார்க்கில் கடந்த 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மழை வெள்ளத்தில் நியூயார்க் | 25 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட அமெரிக்கா | வாய் மூடி நிற்கும் மேற்குலக ஊடகங்கள் | இந்தியா என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருவது வேடிக்கை!.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவசர சிலை அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் “மழை வெள்ளத்தில் நியூயார்க்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், சாலையில் வெள்ளநீர் ஓடுவதால் கார்கள் அனைத்தும் மூழ்கி மிதப்பதை தெளிவாகக் காண முடிகிறது. 


X Link


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2023-ல் இருந்தே இதே வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



Hashtag” ஊடகப் பக்கத்தில் கடந்த 2023-ல் பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு, “வடகிழக்கு அமெரிக்காவில் பெய்த திடீர் கனமழையால் நியூயார்க் நகரம், லாங் தீவு மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கின் பெரிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆகியோர் அவசரகால நிலையை அறிவிக்கத் தூண்டினர்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். 



இதன் மூலம் 2013-ல் எடுக்கப்பட்ட வீடியோவை, பலரும் தவறாகப் பரப்பி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.


முடிவு: 


நம் தேடலில், இது நியூயார்க்கில் கடந்த 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க