யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் இந்த வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்டது. இந்த பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
கடவுளே.. அஜித்தே..!! சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பார்த்ததற்கு பின்பு!
விரிவான விளக்கம்
சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்த்துவிட்டு ரயிலில் நின்றபடியே கடவுளே அஜித்தே என்று கோஷமிடுவது போல வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
Kadavuleyy... Ajitheyy.. !! Chennai presidency clg boys after watching GBU..😧💥
#GoodBadUgly #Ajithkumar #GoodBadUglyBlockbuster
pic.twitter.com/BkxozXZru8
Kadavuleyy... Ajitheyy.. !! Chennai presidency clg boys after watching GBU..😧💥
#GoodBadUgly #Ajithkumar #GoodBadUglyBlockbuster
pic.twitter.com/UQdPEHaUPi
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Yokii” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, “பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் ரயில் பாதையில் சேட்டைகள்” என்று குறிப்பிட்டு 21 ஜூன் 2019 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது. கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் தான், கடவுளே அஜித்தே என்று கத்துவது போன்ற ஆடியோவை மட்டும் சேர்த்து எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பார்த்ததற்கு பின்பு சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.