YouTurn

பராசக்தி திரைப்பட விமர்சனம் என்று பரவும் பழைய வீடியோ!

பராசக்தி திரைப்பட விமர்சனம் என்று பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022-ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “Prince” திரைப்படம் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

படம் பாக்க வந்த சிகா ரசிகர்களே காரி துப்பராங்க @Siva_Kartikeyan

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

பல்வேறு பிரச்சினைகளை தாண்டி, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. 

இந்நிலையில் பராசக்தி திரைப்படம் நன்றாக இல்லை என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தெரிவித்துள்ளதாக கூறி review வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் Bingo Box யூடியூப் பக்கத்தின் லோகோ இருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து கொண்டு Bingo Box யூடியூப் பக்கத்தில், பராசக்தி review வீடியோவை தேடிப் பார்த்தோம். அப்போது ”Parasakthi Public Review” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியாகியிருந்தது. அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தால் அதற்கும், பரவி வரும் வீடியோவுக்கும் எந்த தொடர்புமில்லை என்பது தெரியவந்தது. 


இதையடுத்து பரவி வரும் வீடியோ குறித்து அதே யூடியூப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது ”Prince Public Review” என்று குறிப்பிட்டு அக்டோபர் 21, 2022 அன்று அந்த வீடியோ பதிவாகியிருந்தது. 9.05 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், சரியாக 45 விநாடியில் பரவி வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், கடந்த 2022-ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “Prince” திரைப்படம் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க