யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் மீண்டும் பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படங்கள், கடந்த 2017-க்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள். இவற்றை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இதுகெல்லாம் போராட வேண்டியிருக்கு. தமிழை வைத்து மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கும்பல் இன்று தமிழை அழிக்க நினைக்கிறது! இனியாவது ஒழுங்கா நடந்துக்கோ..
விரிவான விளக்கம்
தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில், தங்களின் எதிர்ப்பின் காரணமாக இப்போது மீண்டும் தமிழ்நாடு என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, பேருந்து ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
புகைப்படத்தில், பேருந்தின் முன் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் பேருந்து மதுரை“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும், அதில் தமிழ்நாடு என்பது மட்டும் வட்டமிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
அதான …. pic.twitter.com/rYtcOAOSDf
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் உள்ள பேருந்தில், “தமிழ்நாடு அரசுப் பேருந்து மதுரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் (TNSTC) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி தற்போது செயல்படும் பேருந்துகளில் “அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்“ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்தபோது, பரவி வரும் புகைப்படம் “TNSTC SETC buses“ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “நாகர்கோவில் பழைய பேருந்துகளின் அரிய புகைப்படங்கள்“ என்று குறிப்பிட்டு கடந்த 2017-ல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதே போன்று, “Classic TNSTC KL buses“ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் அதே புகைப்படங்கள் “NTC (நேசமணி)“ என்று குறிப்பிடப்பட்டு, புகைப்படத்தை எடுத்த சத்யம் என்பவருக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், பரவி வரும் வரும் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல. 2017-ஆம் ஆண்டிற்கு முந்தைய புகைப்படங்கள் என்பது உறுதியாகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்நாடு என்ற பெயர் எப்போது நீக்கப்பட்டது?
பரவி வரும் புகைப்படத்தில் “தமிழ்நாடு” என்ற சொல் உள்ளது. ஆனால், தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்தோம்.
கடந்த 2012ம் ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்ட புதிய பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ நீக்கப்பட்டு ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது.
அடுத்ததாக, மதுரை, விழுப்புரம் என்று கோட்டம் வாரியாக இயக்கப்படும் TNSTC பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்று எழுதி இருந்ததை கடந்த 2012 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காண முடிந்தது.
ஆனால், அதன் பிறகான ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காண முடிகிறது.
இதிலிருந்து, கடந்த அதிமுக ஆட்சியிலேயே அரசு விரைவு பேருந்துகளில் மற்றும் கோட்டம் வாரியான TNSTC பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்ற பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பழைய புகைப்படங்களை பலரும், தற்போது தமிழ்நாடு என்ற பெயர் மீண்டும் அரசு விரைவு பேருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் மீண்டும் பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படங்கள் கடந்த 2017-க்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் என்பது உறுதியாகிறது.