YouTurn

சுற்றுலாத்தளமாக மாறிய திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா என்று பரவும் பழைய புகைப்படம்!

சுற்றுலாத்தளமாக மாறிய திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா என்று பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காட்சி

சரிபார்க்கப்பட்ட கூற்று

சுற்றுலாத்தளமாக மாறிய திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா என்று பரவும் பழைய புகைப்படம்!

பரவிய செய்தி

சிக்கந்தர் தர்காவுக்கு மார்க்கெட்டிங் செய்து இலவச விளம்பரம் கொடுத்த சங்கிகளுக்கு நன்றி 


 

X Link / Archived Link

விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் மலையில் ஏற அவர்களை அனுமதிக்கவில்லை. 


இந்நிலையில் இதானல் சிக்கந்தர் தர்கா தற்போது சுற்றுலாதளமாக  பிரபலமாகி விட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


 

உண்மை என்ன? 


பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது wordpress வலைதளத்தில் “சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு” என்ற தலைப்பில் மார்ச் 04, 2021 அன்று வெளியான கட்டுரையை பார்க்கமுடிந்தது. அதில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வு குறித்து குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


 

இது குறித்து மேலும் தேடிய போது, “பசுமைநடை [31 வது நடை] திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்ஹா பயணம்” என்ற தலைப்பில் பிப்ரவரி 21, 2014 அன்று வெளியான மற்றொரு கட்டுரையை பார்க்கமுடிந்தது. அதிலும் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. பரவி வரும் புகைப்படத்திற்கு தொடர்புடைய பல புகைப்படங்கள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 

 

முடிவு: 


எனவே, பரவி வருவது கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வுடன் தொடர்புடைய பழைய புகைப்படமாகும். இதை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க