YouTurn

தேனியில் பட்டியலினத்தை சேர்ந்தவரின் பிணத்தை செல்ல விடாமல் தடுத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் பழைய செய்தி!

தேனியில் பட்டியலினத்தை சேர்ந்தவரின் பிணத்தை செல்ல விடாமல் தடுத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணம் வரவிடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

பரவிய செய்தி

தேனி பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரின் பிணம் வரக்கூடாதாம்..!?  பிரச்சினை செய்கிறார்கள்.. பார்ப்போம் தஞ்சை மாவட்டம் குடிதாங்கியில் தலித் பிணத்தை சுமந்து எரியூட்டிய  டாக்டர்.ராமதாசு போல யாரு வருவார்கள் என்று..!? படங்கள் & தகவல்கள் : Rama Kanniappan


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணம் வரவிடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. பரவி வரும் புகைப்படங்கள் அங்கு கலவரம் நடந்திருப்பதை தெளிவாகக் காட்டுவதாக உள்ளன.


#Rama_Kalimuthu
இது உண்மையா திருமா pic.twitter.com/Ugf4agR6kJ

— 🌹thangam💃 (@Thanga_mahal) May 13, 2025



உண்மை என்ன? 


பரவி வரும் புகைபடங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2018-ல் இருந்தே பரவி வரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளன என்பதை அறிய முடிந்தது.



மேலும் தேடியதில், “ANI” இது குறித்து கடந்த 2018-ல் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில் “ஒரு தலித் நபரின் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக கொண்டு செல்லப்பட முயன்றதன் காரணமாக, மே 5 ஆம் தேதி தேனியின் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது, மே 7 ஆம் தேதி வரை நிலைமை பதட்டமாகவே இருந்தது. தற்போது சூழ்நிலைகள் சாதாரணமாக உள்ளன“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 


#TamilNadu: Clash took place between Dalits & Muslims in Theni's Bomminaickanpatti village on 5 May when a Dalit man's funeral procession was taken through a Muslim dominated area, situation remained tense till 7 May. At present circumstances are normal. (Earlier visuals) pic.twitter.com/lpkLJd8P7l

— ANI (@ANI) May 9, 2018


இதே போன்று, “The Hindu“ கடந்த 2018-ல் வெளியிட்டுள்ள செய்தியிலும், “தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இறுதி ஊர்வலத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட குழு மோதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மூன்று வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, இரண்டு கடைகள் மற்றும் முஸ்லிம்களின் 50 வீடுகளில் உள்ள வீட்டுப் பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் ஜெயமங்கலம் மற்றும் பெரியகுளத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆய்வின் முடிவில், பரவி வரும் புகைப்படங்கள், கடந்த 2018 ஏப்ரல் 24 அன்று, வன்னியம்மாள் என்ற பெண்ணின் உடலை இஸ்லாமிய தெரு வழியாக எடுத்துசெல்லும் போது ஏற்பட்ட கலவரத்தின் போது எடுக்கப்பட்டவை என்பதையும், இதனை தற்போது நடைபற்ற சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

முடிவு: 


நம் தேடலில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணம் வரவிடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி பரவும் புகைப்படங்கள் கடந்த 2018-ல் ஏற்பட்ட பழைய சம்பவத்தோடு தொடர்புடையவை என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க