YouTurn

கம்யூனிஸ்ட் கூட்டத்தின் பழைய படத்தையும் சேர்த்து பகிரும் பாஜகவினர் !

கம்யூனிஸ்ட் கூட்டத்தின் பழைய படத்தையும் சேர்த்து பகிரும் பாஜகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


மோடிஜி அவர்களின் பொது கூட்டம் மேற்கு வங்கத்தில் கடல் அலை..



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட கூட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும், ஆதரவாளர்கள் தரப்பிலும் பகிரப்பட்டு வருகிறது.





அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களின் தொகுப்புகளில், பதிவுகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் மேற்கு வங்க இடதுசாரிகள் சார்பாக நடைபெற்ற பேரணி கூட்டத்தின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.



தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கூட அப்புகைப்படத்தை வெளியிட்டு பின்னர் அந்த ட்வீட் பதிவை நீக்கி உள்ளனர். ஆனால், அந்த ஸ்க்ரீன்ஷார்ட் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் இடது முன்னணி சார்பில் பேரணி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பல கட்சியினரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டம் என பழைய புகைப்படத்தை பகிரும் ஆதரவாளர்கள் !

கொல்கத்தாவில் அரசியல் கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டங்கள் பிரிகேட் மைதானத்தில் நடைபெறுவதால், இணையத்தில் அந்த மைதானம் தொடர்பாக கிடைக்கும் புகைப்படத்தை தெரிந்தும், தவறுதலாகவும் எடுத்து பகிர்ந்து விடுகிறார்கள்.



Twitter link 

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெருமளவு கூட்டம் கூடி இருந்தாலும் அக்கட்சியினரும் ஆதரவாளர்களும் தவறான புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள் .
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க