YouTurn

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வின் விவரங்கள் என்று பரப்பப்படும் பழைய அட்டவணை!

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வின் விவரங்கள் என்று பரப்பப்படும் பழைய அட்டவணை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 2022ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வின் போது வெளியிடப்பட்ட பழைய அட்டவணை. 2025 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வு விவரங்கள் என்று விலைப் பட்டியலும் இதுவரை அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

பரவிய செய்தி

01/07/2025 முதல் புதிய கட்டண முறை!



Link

விரிவான விளக்கம்

யூனிட்கள் வாரியாக பழைய மின் கட்டணம் எவ்வளவு, புதிய மின் கட்டணம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது, மொத்தம் எவ்வளவு ரூபாய், எவ்வளவு விகிதம் அதிகரித்துள்ளது என்பதை பட்டியலிடும் அட்டவணை ஒன்றை பதிவிட்டு, ‘இதுதான் புதிதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்றும், இது வரும் ஜீலை 2025 முதல் அமலுக்கு வரும்’ என்றும் பாஜக ஆதாரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் அட்டவணையின் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், பரப்பப்படும் இந்த மின் கட்டண உயர்வு குறித்த அட்டவணையைக் காணமுடிந்தது. 


image.png


மேலும், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு’ என்ற keywords கொண்டு தேடியதில், இது குறித்து ’தினமணி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ’கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நிகழாண்டு (2025) ஜீலை மாதம் முதல் 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு பரிந்துரை அளித்துள்ளதாக’ தெரிய வருகிறது. 



மேலும் இந்த செய்தியின்படி, ‘மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மின் கட்டணம் கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதமும், 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதே செய்தியில், மின்சாரத் துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வரும் ஜூலை 1-க்குள் வெளியாகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, பரப்பப்படும் மின் கட்டணம் அட்டவணை 2022ஆம் ஆண்டு வெளியிட்ட பழைய அட்டவணை என்பதும், தமிழ்நாட்டில் கடைசியாக 2024ஆம் ஆண்டு  மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் தெளிவாகிறது. மேலும், 2025ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ள நிலையில், அதன் மீது எந்த விதமான அதிகாரப்பூர்வமான முடிவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு:


2022ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியிடப்பட்ட பழைய அட்டவணையை தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போல் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.