YouTurn

சென்னையில் தேங்கிய மழைநீரை புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றுவதாகப் பரப்பப்படும் வதந்தி !

சென்னையில் தேங்கிய மழைநீரை புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றுவதாகப் பரப்பப்படும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?

X Post Link  | Archive link 

விரிவான விளக்கம்

சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த, கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தாலும், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் துண்டிப்பாலும் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சாலைகளில் புல்டோசரின் உதவி மூலம் தண்ணீர் அகற்றப்படுவதைப் பாருங்கள் என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிமுக கட்சியைச் சேர்ந்த CTR. நிர்மல் குமார் உட்பட, பாஜகவினர் பலராலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. பரவி வரும் வீடியோவில் புல்டோசரின் மூலம் அகற்றப்படும் தண்ணீர், மற்றொரு வண்டிக்கு மாற்றப்படுவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் கடந்த 2022 ஜூலை 24  அன்று Khushal Pakistan என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. இவருடைய சுயவிவரங்க்களை ஆய்வு செய்ததில் இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.



மேலும் தேடியதில், இதற்கு முன்னரே கடந்த 2018 டிசம்பர் 06 அன்று finofilipino என்ற ஸ்பானிஷ் மொழியைச் சேர்ந்த பொழுதுபோக்கு வலைத்தளப்பக்கத்தில் "உங்களுக்கு மணிநேரத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும்போது" என்ற தலைப்பில் நையாண்டியாக பதிவு செய்யப்பட்டு இதே வீடியோ வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.



ஆனால் 2018-ல் இருந்தே வெளிநாட்டு ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!

முடிவு:

நம் தேடலில், சென்னையில் வெள்ள நீரை புல்டோசர் மூலம் அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க