யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஒரிசா, கொனார்க் கோயில். கோயிலுக்குள் இருந்து சூரியன் எழுகிறது. இது 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
கோவிலுக்குள் சூரியன் ஒளி வீசும் காட்சியை பலரும் புகைப்படம் எடுப்பது போன்று இருக்கும் புகைப்படமானது ஒடிசா மாநிலத்தில் உள்ள கொனார்க் சூரியன் கோவில் என சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

உண்மை என்ன ?
கொனார்க் சூரியன் கோவில் என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " தாய்லாந்து நாட்டில் உள்ள ஃபனோம் ரங்(Phanom Rung) வரலாற்று பூங்கா என முடிவுகள் பல காண்பித்தன.

தாய்லாந்தின் ஃபனோம் ரங் வரலாற்று பூங்கா தேடுகையில், Shutter stock இணையதளத்தில் ஃபனோம் ரங் வரலாற்று பூங்காவின் கெமெர் கோவில் என வைரல் செய்யப்படும் புகைப்படம் போன்றே மக்கள் சூரியன் தென்படும் காட்சியை புகைப்படம் எடுக்கும் மற்றொரு புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கொனார்க் கோவிலையும், தாய்லாந்து ஃபனோம் ரங் வரலாற்று பூங்கா கோவில் இரண்டையும் ஒப்பிட்டு உள்ளதை கீழே பார்க்கலாம்.

முடிவு :
நம் தேடலில், ஒடிசா மாநிலத்தில் உள்ள கொனார்க் கோவில் என வைரல் செய்யப்படும் புகைப்படம் தாய்லாந்து நாட்டில் உள்ள ஃபனோம் ரங் வரலாற்று பூங்கா கோவில் என அறிய முடிகிறது.