யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் - சீமான்

விரிவான விளக்கம்
தமிழரா.. திராவிடரா ? இன விடுதலை அரசியல் கருத்தரங்கத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், " திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் " எனப் பேசியதாக IBC தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?
நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு தொடர்பாக IBC தமிழ் உடைய முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அதுபோன்ற நியூஸ் கார்டுகள் கிடைக்கவில்லை. மாறாக, அதே நியூஸ் கார்டு வடிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
Facebook link
அதில், ஆரியம்,திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான்!. இந்தியன், திராவிடம் இரண்டுமே எங்கள் தமிழ் தேசியத்தின் எதிரிகள், ஆரியம் வேறு இந்தியன் வேறு அல்ல " என சீமான் பேசியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரப்பப்படும் IBC தமிழ் நியூஸ் கார்டு போலியானது.
ஆரியம், திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே தங்களுக்கு எதிரி என்றே சீமான் பேசியுள்ளார் என அறிய முடிகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?
நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு தொடர்பாக IBC தமிழ் உடைய முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அதுபோன்ற நியூஸ் கார்டுகள் கிடைக்கவில்லை. மாறாக, அதே நியூஸ் கார்டு வடிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
Facebook link
அதில், ஆரியம்,திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான்!. இந்தியன், திராவிடம் இரண்டுமே எங்கள் தமிழ் தேசியத்தின் எதிரிகள், ஆரியம் வேறு இந்தியன் வேறு அல்ல " என சீமான் பேசியுள்ளார்.
முடிவு : நம் தேடலில், திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா ? ஆரியமா ? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும் என சீமான் பேசியதாக பரப்பப்படும் IBC தமிழ் நியூஸ் கார்டு போலியானது.
ஆரியம், திராவிடம் வெவ்வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே தங்களுக்கு எதிரி என்றே சீமான் பேசியுள்ளார் என அறிய முடிகிறது.