YouTurn

சீமான் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

சீமான் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மானமிகு உயர்குடிபிறந்த மாவீரன். தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை தன் தோட்டாக்களால் நிறைவேற்றியப் போர்வீரன். இந்திய தேசத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அடையாள உருவாய் திகழும் ஐயா. நாத்தூரம் விநாயக் கோட்சே அவர்களுக்கு, தேசப்பிதா காந்தியின் பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம் ! - செந்தமிழன் சீமான்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

காந்தி ஜெயந்தியன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக போஸ்டர் ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று சீமான் உடைய ட்விட்டர் பக்கத்தில், " தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம்! " என்ற போஸ்டர் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது.



Archive link 

சிவாஜி பிறந்தநாளன்று வெளியிட்ட இந்த போஸ்டரில் கோட்சேவிற்கு அஞ்சலி செலுத்துவது போன்று எடிட் செய்து தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோட்சேவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக பரப்பப்படும் போஸ்டர் போலியானது. சிவாஜி பிறந்தநாளன்று வெளியிட்ட போஸ்ட்ரில் எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க