YouTurn

நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளதாகப் பரவும் பொய்!

நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காசுக்காக கூட்டணி வைத்த கட்சிகளுக்கு இடையே தனித்து நின்று 19% வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும்னு சொல்லும் போதே கெத்தா இருக்குயா!


X link | Archive link 

விரிவான விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும், எத்தனை சதவீத வாக்குகளைப் பெறும் என ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 



இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் நாம் தமிழர் கட்சி 19 சதவீதம் வாக்குகளுடன் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டு இருப்பதாக கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 


Facebook link


இதேபோன்று நாம் தமிழர் கட்சி 19 சதவீதம் வாக்குகளை மட்டும் பெற்று எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறாது என்றும் பரப்பப்படுகிறது. இந்த இரண்டு கார்டுகளையும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களால் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன? 

நாம் தமிழர் கட்சியினர் பரப்பக் கூடிய கார்டில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 45. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்களவை தொகுதிகள் 39 தான். இந்த அடிப்படை எண்ணிக்கையே தவறாக இருந்ததினால் ’நியூஸ் 18 தமிழ்நாடு’ சமூக வலைத்தள பக்கங்களில் இந்த கருத்துக் கணிப்பு குறித்துத் தேடினோம்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துக் கடந்த 13ம் தேதி (2024, மார்ச்) நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘திமுக - 30, அதிமுக - 4, பாஜக - 5, மற்றவை - 0’ என்று உள்ளது. 



இதேபோல் வாக்கு சதவீதம் திமுக - 51%, அதிமுக - 17%, பாஜக - 13%, மற்றவை - 19%’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ’நாதக’ என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.



இக்கருத்துக்கணிப்பு தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவும் கிடைத்தது. அதில், நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 



மற்ற கட்சிகள் என்றால், மேலே குறிப்பிட்ட திமுக, அதிமுக, பாஜக கூட்டணியைத் தவிர்த்து உள்ள மற்ற கட்சிகள் அனைத்தையும் குறிக்கும். 

இவற்றிலிருந்து நாம் தமிழர் கட்சி 19 சதவீதம் வாக்குகளை பெறும் என்ற தகவலுடன் பரவக் கூடிய கருத்துக் கணிப்பு கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நாம் தமிழர் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 19 சதவீத வாக்குகளுடன் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாகப் பரவும் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது. நியூஸ் 18  தமிழ்நாடு வெளியிட்ட கார்டில் மற்றவை 19 சதவீதம் என்றுதான் உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க