YouTurn

நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதாக பரவும் ’வெங்கடேஷ் பட்’ வீடியோ!

நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதாக பரவும்  ’வெங்கடேஷ் பட்’ வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நூடுல்ஸ் தயாரிப்பின்போது மெழுகு சேர்க்கப்படுவதாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதரமும் இல்லை.

பரவிய செய்தி

நூடுல்ஸ் சாப்பிட கூடாது ஏன் சொல்றாங்க தெரியுமா..?



X Link

விரிவான விளக்கம்

நூடுல்ஸில் ’மெழுகு' (Wax) சேர்க்கப்படுவதாகவும், அந்த மெழுகு குடலைவிட்டு வெளியேற மூன்று மாதங்கள் ஆகும் என்றும் பிரபல சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் ‘பிகைண்ட்வுட்ஸ் ஏர் சேனலுக்காக’ அளித்த பேட்டியின் துணுக்கு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


உண்மை என்ன?


இவ்வாறு தகவல் பரவுவது இது முதல்முறையல்ல. நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவது உண்மை தானா? என்ற கேள்வியுடன் இணையத்தில் தேடினோம்.


‘USA Today’ வெளிட்டுள்ள செய்தியின்படி, 2016ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு தகவல் பேஸ்புக் தளத்தில் பரவியுள்ளதை குறிப்பிடுகிறது. 


மேலும், நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுகிறது என்ற கூற்றை பொய்யென ’சிங்கப்பூர் உணவு நிறுவனம்’ மறுத்துள்ளது. இது சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ நிறுவனமாகும். 



மேகி (Maggi) நிறுவனம் அதன் நூடுல்ஸ் தயாரிக்கப்படுவதற்கு சேர்க்கப்படும் மூலப்பொருட்கள் பற்றி அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதில், ’மெழுகு’ பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை. மேலும், மற்றொரு இடத்தில், மேகியில் மெழுகு சேர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்காக விடையாக, ‘உணவுப் பொருளில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி மிகக் கடுமையான விதிகள் உள்ளன.  மேலும் உணவுச் சங்கிலியில் எந்த மூலப்பொருளையும் அனுமதிக்கும் முன் அதிகாரிகள் மிகக் கடுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.’ இதனையும் மீறி மெழுகு போன்ற பொருட்களை சேர்க்கமுடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. Maruchan Ramen Noodles நிறுவனமும் ’தனது நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதில்லை’ என்று இதுபோன்ற விளக்கக் குறிப்பை எழுதியுள்ளது.



மேலும் ‘USA Today’ செய்தியின்படி நூடுல்ஸில் மெழுகு இருப்பதாக பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவில் கூட, ‘இந்த மெழுகு குடலைவிட்டு வெளியேற இரண்டு நாட்களாகும்’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், வெங்கடேஷ் பட் மூன்று மாதங்கள் என்று சொல்கிறார்.


இதிலிருந்து நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுவது ஆதாரமற்ற வதந்தி என்பது தெளிவாகிறது.


முடிவு: 


நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதாகவும், அது குடலைவிட்டு வெளியேற மூன்று மாதங்கள் என்றும் வெங்கடேஷ் பட் சொல்வது தவறான தகவலாகும். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க