YouTurn

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா ?

மாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு ! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், " மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை " எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.



Facebook link | Archive link  

+



உண்மை என்ன ? 

தீபாவளிக்கு அசைவ உணவு உண்பவர்கள் ஹிந்துக்களே அல்ல, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் தீபாவளிக்கு இறைச்சிக் கடைகள் மூடப்படும் என ஹெச்.ராஜா கூறியதாக தீபாவளியன்று வதந்தியை பரப்பினர். அது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா ?

தற்போது, மீண்டும் ஹெச்.ராஜா " மாமிசம் உண்பவர்களின் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை " எனக் கூறியதாக மீண்டும் வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். நவம்பர் 17-ம் தேதி வெளியான நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டை தேடிய பொழுது, " விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு ! கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள் ; ஆன்மிகத்தை கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள் !" எனக் கூறியதாக நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.

'

Archive link  

கருணாநிதியின் மனைவி மற்றும் ஸ்டாலின் மனைவி குறித்து ஹெச்.ராஜா பேசியதாக வெளியான நியூஸ் கார்டில் மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவிற்கு தேவையில்லை என எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க