YouTurn

வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழகம் திரும்ப புதிய இணையதளம் - தமிழக அரசு.

வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழகம் திரும்ப புதிய இணையதளம் - தமிழக அரசு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு நிலவி வருவதால் பலர் பிற மாநிலங்களில், பிற நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஊரடங்கால் சிக்கி இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள்...

பரவிய செய்தி

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை. பிரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டது தமிழக அரசு. nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் - தமிழக அரசு. தமிழகத்திற்கு திரும்புவோரின் விவரமறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதிகள் ஏற்படுத்த இந்த இணையதளத்தில் பதியலாம்.

விரிவான விளக்கம்

கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு நிலவி வருவதால் பலர் பிற மாநிலங்களில், பிற நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஊரடங்கால் சிக்கி இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது என அறிவித்தனர்.

அதேபோல், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் கொண்டவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில் உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்கள் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கத்தில் மற்றும் அவர்களது எண்ணிக்கையை அறிந்து கொள்ளவும், தமிழ்நாட்டிற்கு திரும்பக்கூடியவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும், அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு இணைய பதிவு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்கிய பின் தமிழ்நாட்டிற்கு திரும்ப வர நினைப்பவர்கள் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கான முன்னேற்பாடுகளை அரசால் மேற்கொள்ள முடியும்.

Link :

Lockdown in Tamil Nadu: Govt launches website to help non-resident Tamils return home
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…