யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின் போது, கேரளாவில் ஆடு, மாடுகளுக்கு என மேய்ச்சல் நிலம் உள்ளது. தமிழ்நாட்டில் அப்படி இல்லை எனப் பேசியுள்ளார்.
பரவிய செய்தி
கேரளாவில் மேய்ச்சல் நிலம் உள்ளது தமிழ்நாட்டில் கிடையாது – சீமான்

விரிவான விளக்கம்
- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின் போது, கேரளாவில் ஆடு, மாடுகளுக்கு என மேய்ச்சல் நிலம் உள்ளது. தமிழ்நாட்டில் அப்படி இல்லை எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் கால்நடைகளின் மேய்ச்சல் பயன்பாட்டுக்காக மேய்க்கால் புறம்போக்கு (அ) மந்தைப் புறம்போக்கு நிலங்கள் என்ற தனி வகைப்பாடு உண்டு. இவ்வகை நிலங்களை அரசு மாற்றுத் திட்டத்திற்கோ அல்லது மூன்றாம் நபரோ பயன்படுத்த அனுமதி இல்லை.
இவ்வகை நிலம் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் ’இந்து தமிழ் திசையில்’ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் அது ஒதுக்கீடு செய்யப்பட்ட நோக்கத்தைத் தாண்டி வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாக உள்ளது.
ஒருவேளை அத்தகைய நிலம் மாற்றுத் திட்டத்திற்கு அரசு பயன்படுத்தினால், அதற்குச் சமமான வேறு இடம் ஒதுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே அந்த நிலத்தில் மாற்றுத் திட்டத்தை அரசு மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி அரசு அலுவலர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “தமிழ்நாட்டில் மேய்க்கால் புறம்போக்கு (அ) மந்தைப் புறம்போக்கு நிலங்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் உள்ளன” என்றார். மேலும் மேற்குறிப்பிட்ட தகவலையும் உறுதிப்படுத்தினார்.
இவற்றிலிருந்து தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலங்களை இல்லை எனச் சீமான் பேசி இருப்பது தவறான தகவல் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
கேரளாவில் ஆடு, மாடுகளின் மேய்ச்சலுக்காக மேய்க்கால் நிலம் உள்ளது. தமிழ்நாட்டில் அப்படி இல்லை எனச் சீமான் பேசியது தவறான தகவல். தமிழ்நாட்டிலும் அத்தகைய நிலங்கள் உள்ளன.