YouTurn

CAA-க்கு எதிராக போராடுபவர்களை இழிவுபடுத்தி நிதா அம்பானி ட்வீட் செய்தாரா ?

CAA-க்கு எதிராக போராடுபவர்களை இழிவுபடுத்தி நிதா அம்பானி ட்வீட் செய்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியா அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்காக போராட்டங்கள் தொடரும் தருணத்தில், முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி CAA மற்றும் NRC-க்கு ஆதரவாகவும், போராடுபவர்களை கொச்சைப்படுத்தியும் ட்வீட் பதிவை வெளியிட்டு உள்ளதாக ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக...

பரவிய செய்தி

2 - 4 ஆயிரம் நாய்கள் தெருவில் இறங்கி ஊளையிடுகிறார்கள் என்பதற்காக .NRC.CAB சட்டங்களிலிருந்து பின் வாங்காதீர்கள்.100 கோடி சிங்கங்கள் உங்களுடன் இருக்கிறார்ள்.
நிதா அம்பானி



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

இந்தியா அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்காக போராட்டங்கள் தொடரும் தருணத்தில், முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி CAA மற்றும் NRC-க்கு ஆதரவாகவும், போராடுபவர்களை கொச்சைப்படுத்தியும் ட்வீட் பதிவை வெளியிட்டு உள்ளதாக ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி உள்ளது.



 



இந்திய அளவில் வைரலாக ட்விட்டர் பதிவால், பலரும் கண்டனங்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஜியோ நெட்வொர்க் சேவையை பயன்படுத்த வேண்டாம் என பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருவதை காண முடிந்தது.

உண்மை என்ன ? 

நிதா அம்பானி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டதாக பரவும் ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் போலியான ட்விட்டர் கணக்காகும். அந்த ட்விட்டர் பக்கம் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. குறிப்பாக, நிதா அம்பானி ட்விட்டர் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை.



@nitaambani என்ற பெயரில் பல்வேறு ட்விட்டர் கணக்குகள் இருக்கின்றனர் என்பதை அறிய முடிந்தது. மேலும், டிசம்பர் 20-ம் தேதி 17.6ஆயிரம் ஃபாலோயர்கள் கொண்ட @nitaambani என்ற ட்விட்டர் பக்கம் தவறான பதிவுகளையும், வெறுப்பு பதிவுகளை பகிர்ந்த காரணத்தினால் ட்விட்டர் தளம் நீக்கியுள்ளதாக ஸ்க்ரீன்ஷார்ட் உடன் ட்விட்டர் பக்கமொன்றில் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | archived link 



நிதா அம்பானி குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தன்னுடைய கருத்தினை பகிர்ந்ததாக முதன்மை செய்திகளில் ஏதும் வெளியாகவிலை. போலியான ட்விட்டர் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் வைரல் செய்யப்பட்டு சர்ச்சையாகி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…