YouTurn

மக்கள் தனி வாகனம் வாங்குவதால் பெட்ரோல் விலை உயர்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

மக்கள் தனி வாகனம் வாங்குவதால் பெட்ரோல் விலை உயர்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மக்களின் பேராசையே காரணம். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் - நிர்மலா சீதாராமன்.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விலை உயர்வு காரணமாக ஆளும் பாஜக அரசு மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது.



இந்நிலையில், பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து உள்ளதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன? 



மார்ச் 26-ம் தேதி, " விலை உயர்வுக்கு போர்தான் காரணம் தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு போர் சூழலும் ஒரு காரணம் " என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நியூஸ் 7 சேனல் வெளியிட்டு இருக்கிறது.



எரிபொருள் விலை உயர்விற்கு போர் தான் காரணம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான செய்தியை எடிட் செய்து போலியான செய்தியை பரப்பி உள்ளனர். மேலும், இதை நாங்கள் வெளியிடவில்லை என நியூஸ் 7 தமிழ் சேனலும் போலிச் செய்திக் குறித்து தெரிவித்து உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க