YouTurn

விலைவாசி உயர்விற்கு மக்களை கீதா சாரத்தை நினைக்கச் சொன்னாரா நிர்மலா சீதாராமன் ?

விலைவாசி உயர்விற்கு மக்களை கீதா சாரத்தை நினைக்கச் சொன்னாரா நிர்மலா சீதாராமன் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதா சாரத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

விரிவான விளக்கம்

இந்தியா இருக்கும் பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. ஆகையால், இந்நேரத்தில் கீதா சாரத்தின் வரிகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

மே 9-ம் தேதியிட்ட நியூஸ் கார்டு குறித்து பாலிமர் சேனலில் தேடுகையில், " பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வருமா ? என்ற கேள்விக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனை செய்யும் " என நிர்மலா சீதாராமன் பேசியதாகவே செய்தி வெளியாகி இருக்கிறது.



Facebook link  

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவது பற்றி நிர்மலா சீதாராமன் பேசியதாக வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர் .



முடிவு : 

நம் தேடலில், தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதா சாரத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க