YouTurn

நிர்மலா சீதாராமன் தந்தையின் எளிமையான வீடு எனப் பரப்பப்படும் பாரதியாரின் உறவினர் வீடியோ !

நிர்மலா சீதாராமன் தந்தையின் எளிமையான வீடு எனப் பரப்பப்படும் பாரதியாரின் உறவினர் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் தன் தந்தையுடன் அவரது வீட்டில். வீட்டை கவனியுங்கள். நம் ஊரில் சாதாரண கவுன்சிலர் பதவியில் இருப்பவர்களின் வீட்டை எண்ணிக் கொள்ளுங்கள்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என சமூக வலைத்தளங்களை பாஜக ஆதரவாளர்கள் இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில், அமைச்சரின் வீட்டினை பாருங்கள். இதே நமது ஊரில் கவுன்சிலராக இருப்பவரின் வீட்டினை எண்ணிப் பாருங்கள் எனப் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/Lalitha19010440/status/1613366727383056384

அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமனை முதியவர் ஒருவர் நாற்காலியில் அமரச் சொல்கிறார். பிறகு நிர்மலா சீதாராமன் சிலரை அம்முதியவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். 

https://twitter.com/Ramakri18836461/status/1613144073933836288

Archive link

உண்மை என்ன ?

பரவக்கூடிய வீடியோவில் ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். இது தொடர்பாக ’socialnews.xyz’ என்ற இணையதளத்தில் 2022, டிசம்பர் 3ம் தேதி புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் வீட்டினை பார்வையிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Archive link

இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், 2022, டிசம்பர் 4ம் தேதி 'சுப்பாராவ்' என்பவர் பரவக்கூடிய வீடியோவை தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது. அதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாரதியாரின் பேரன் கே.வி.கிருஷ்ணனை (96 வயது) வாரணாசியில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/SubbaRaoTN/status/1599309759622307841?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599309759622307841%7Ctwgr%5E92951f06a7f33c0731613cfaee7351866d898bd4%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fen.youturn.in%2Ffactcheck%2Fnirmala-sitharaman-bharathiyars-residence-varanasi.html

Archive link 

இதே வீடியோவை நிர்மலா சீதாராமனும் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதிலும், வாரணாசியில் உள்ள சிவா மடத்திற்குச் சென்று மகாகவி பாரதியின் மருமகன் (தங்கை மகன்) கே.வி.கிருஷ்ணனைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 



Instagram link

இதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய வீடியோவில் இருப்பது நிர்மலா சீதாராமனின் தந்தையோ, அவரது வீடோ கிடையாது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், நிர்மலா சீதாராமன் தனது தந்தையைச் சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் இருப்பது மகாகவி பாரதியாரின் உறவினரான கே.வி.கிருஷ்ணன் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க