YouTurn

திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ‘நியூஸ் தமிழ் 24 x 7’ ஊடகம்!

திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ‘நியூஸ் தமிழ் 24 x 7’ ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் நடிகர் பரத் என்று கூறி சின்னத்திரை நடிகர் பரத்தின் புகைப்படத்திற்கு பதில், திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு ‘நியூஸ் தமிழ்’ ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் நடிகர் பரத்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தினருக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Threads Link | Archived Link

விரிவான விளக்கம்

சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் மே10ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் சின்னைத்திரை நடிகர் சங்கத்திற்கு திரைப்பட நடிகர் பரத் தலைவரானார் என்று நியூஸ் தமிழ் 24x7 ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் “Actor Bharath | சின்னத்திரை தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் பரத்..! | Serial Actor Bharath” என்ற தலைப்பில் யூடியூப் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சின்னத்திரை நடிகர் பரத்தின் பேட்டி இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. 491 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றதாகவும், வாக்குகளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். 


மேலும் விகடன் ஊடகத்திலும் “சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்ச்சித் தோல்வி!” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதாகவும், இதில் சின்னத்திரை நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.


அதே போல் தினத்தந்தி, Oneindia tamil போன்ற ஊடகங்களிலும் சின்னத்திரை பரத் தலைவரனார் என்றே குறிப்பிட்டு அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


முடிவு:

நம் தேடலில், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் நடிகர் பரத் என்று கூறி சின்னத்திரை நடிகர் பரத்தின் புகைப்படத்திற்கு பதில், திரைப்பட நடிகர் பரத்தின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு ‘நியூஸ் தமிழ்’ ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டிருந்தது தெரியவந்தது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க