YouTurn

ஜப்பானில் நிலநடுக்கம்! பழைய வீடியோவை பயன்படுத்தி செய்தி வெளியிட்ட ’News 18 தமிழ்நாடு’ ஊடகம்!

ஜப்பானில் நிலநடுக்கம்! பழைய வீடியோவை பயன்படுத்தி செய்தி வெளியிட்ட ’News 18 தமிழ்நாடு’ ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ உண்மையில் 2024 ஜனவரி மாதம் ஜப்பானில் வடக்கு நோட்டோ என்ற தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது

பரவிய செய்தி

ஜப்பானின் இவாட் மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை 


image.png


X Link / Archive Link



விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வடக்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் வடக்கு கடற்கரை அருகில் உள்ள 182 நகரங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருந்தது. 


இது குறித்து ஏப்ரல் 20ஆம் தேதி ’News 18 தமிழ்நாடு’ செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சாலைகள், தெருவில் உள்ள கட்டிடங்கள், மின் கம்பங்கள் ஆகிய நிலநடுக்கத்தால் ஆடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது.



உண்மை என்ன? 


பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE LEGION CLUB’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025 டிசம்பர் மாதமே இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. 2025 டிசம்பர் மாதம் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் தேடுகையில், ‘MBS News’ என்ற  யூட்யூப் தளத்தில்  2024 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த ஒரு வீடியோவில் இந்த காட்சியைக் காணமுடிந்தது. அதில் ஜப்பானின் நோட்டோ என்ற தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  



மேலும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ’எக்ஸ்’ பக்கத்தில், இந்த வீடியோ காட்சி பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதிலும்  நோட்டோ என்ற தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


செய்திகளில் இது குறித்து தேடிய போது, ‘NASA’-வின் அதிகாரப்பூர்வ தளத்தில் 2024 ஜனவரி 1ஆம் தேதி ஜப்பானின் வடக்கு நோட்டோ தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,  அதன் பாதிப்பு சுசு, நோட்டோ, வாஜிமா, அனாமிசு ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ உண்மையில் 2024 ஜனவரி மாதம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது என்பதும், அதற்கடுத்து ஒவ்வொரு முறை ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படும் போதும் இந்த வீடியோ பரப்பப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. 


முடிவு:


2024 ஜனவரி மாதம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து வெளியிட்ட செய்தியில் பயன்படுத்தி தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது  ’News 18 தமிழ்நாடு’ ஊடகம்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க