யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா வைரஸ் உடன் தொடர்புப்படுத்தி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் குவிக்கப்படுகின்றன. சில இடங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழலில் புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள் மூலம் மக்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவதாக 15...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் உடன் தொடர்புப்படுத்தி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் குவிக்கப்படுகின்றன. சில இடங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள சூழலில் புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள் மூலம் மக்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவதாக 15 பாயிண்ட்கள் அடங்கிய வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தி ஒன்று வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
உலகளாவிய நோய்த்தொற்று பரவும் நேரத்தில் தேவையற்ற செய்திகள் பகிர்வதை தடுக்கவும் மக்களை எச்சரிக்கை செய்வது சரியானதாக இருந்தாலும், தவறான செய்திகளின் மூலம் அதை மேற்கொள்வது தவறு.
இந்திய அரசாங்கத்தின் தரப்பில் புதிய விதிமுறைகள் ஏதும் விதிக்கப்படவில்லை. அனைத்து சாதனங்களையும் அரசின் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தற்போது கூறுவது போல் முன்பே தவறான ஃபார்வர்டு தகவல்கள் பரவி இருந்தன. அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை.
மேலும் படிக்க : செல்போன் உரையாடலை ரெக்கார்ட் செய்யும் அரசு: வாட்ஸ் ஆஃப் வதந்தி..!
கடந்த 2018-ம் ஆண்டில் இதே ஃபார்வர்டு வதந்தி செய்தி ஒன்று வைரலாகியது. அது தொடர்பாக விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : உங்களின் வாட்ஸ் அப் உரையாடலை அரசு படித்து கண்காணிக்கிறதா ?
அதேபோல், 2019-ல் அனைத்து மக்களின் வாட்ஸ் அப் உரையாடலை அரசு கண்காணிக்கிறதாக தவறான ஃபார்வர்டு செய்தி ஒன்று பரவி இருந்தது. இப்படி ஃபார்வர்டு வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. ஆகையால், நீங்கள் ஃபார்வர்டு செய்யும் தகவலின் உண்மைத்தன்மையை அறிந்து பகிருங்கள்.
வாட்ஸ் அப் செயலியில் ஒரு செய்தியை ஒருமுறை ஃபார்வர்டு செய்யும்படி விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆகையால், தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம்.