YouTurn

புதிய அர்ச்சகர் பீர் குடிப்பதாக பரப்பப்படும் பழைய அர்ச்சகர் புகைப்படம் !

புதிய அர்ச்சகர் பீர் குடிப்பதாக பரப்பப்படும் பழைய அர்ச்சகர் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புதிய அர்ச்சகர் ... தீர்த்தவாரி..



Facebook link

விரிவான விளக்கம்

திமுக ஸ்டாலின் அரசால் பதவி பெற்ற திக, கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த புதிய அர்ச்சகர் மந்திரம் ஓதும் வாயில் பீர் பாய்கிறது என அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

கோவிலில் கடவுளுக்கு மந்திரம் ஓதும் அர்ச்சகர் சாலையின் ஓரத்தில் பீர் குடிப்பதாக இவ்வீடியோ கடந்த பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.



பீர் குடித்துக் கொண்டிருந்த அர்ச்சகரை பிடித்தவர்கள் அவரை திட்டி அடித்து துரத்தும் வீடியோ 2017-ல் இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்ட ஒன்று. அதை தற்போதைய அரசு நியமித்த அர்ச்சகர் எனக் கூறி தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



இதேபோல், ஆகம விதிப்படி கருவறை பூஜைக்கு தயாரான போது எனக் கூறி இதே பழைய  புகைப்படத்தை தற்போது பரப்பி வருகிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க : அனைத்து சாதி அர்ச்சகர் பூணூல் போட்டு இருக்கும் லட்சணம் என தவறாக பரப்பப்படும் செல்ஃபி புகைப்படம் !

மேலும் படிக்க : அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் சாமி சிலையின் மீது நிற்பதாக பரப்பப்படும் பழைய புகைப்படம்!

முடிவு :

நம் தேடலில், புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் பீர் குடிப்பதாக பரப்பப்படும் புகைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக வைரலான வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க