YouTurn

கைதிகள் இல்லை சிறைகளை மூடும் நெதர்லாந்து தேசம் !

கைதிகள் இல்லை சிறைகளை மூடும் நெதர்லாந்து தேசம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குற்றவாளிகளால் சிறைகள் நிரம்பி போதிய இடமில்லாமல் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில் பிரச்சனை வேறுவிதமாக இருக்கிறது. 17 மில்லியன் மக்கள் தொகை நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. சிறைகளில் போதிய...

பரவிய செய்தி

நெதர்லாந்து மிகவும் பாதுகாப்பானது, அங்குள்ள சிறைக்கு வெளிநாட்டில் இருந்து கைதிகளை இறக்குமதி செய்கின்றனர். சமீபத்தில் குற்றவாளிகள் இல்லை என்ற காரணத்தினால் நெதர்லாந்தில் உள்ள 19 சிறைகள் மூடப்பட்டன.

விரிவான விளக்கம்

மெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குற்றவாளிகளால் சிறைகள் நிரம்பி போதிய இடமில்லாமல் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில் பிரச்சனை வேறுவிதமாக இருக்கிறது.



17 மில்லியன் மக்கள் தொகை நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. சிறைகளில் போதிய கைதிகள் இல்லை என்ற காரணத்தினால் 19 சிறைகளை அந்நாட்டு அரசு இழுத்து மூடியுள்ளது. 2004-ம் ஆண்டில் இருந்து குற்றங்களை குறைக்க மேற்கொன்டு வந்த நடவடிக்கைகளால் இம்மாற்றம் உருவாகியுள்ளது.

ஒருகாலத்தில் சிறை கைதிகள் விகிதத்தில் ஐரோப்பாவிலேயே அதிக விகிதத்தை கொண்ட நாடுகளில் நெதர்லாந்து தேசமும் இருந்தது. ஆனால், தற்பொழுது அவர்களின் கூற்றின்படி, 1,00,000 மக்களுக்கு 57 கைதிகள் என்ற விகிதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே 1,00,000 பேருக்கு இங்கிலாந்து நாட்டில் 148 கைதிகள் இருப்பதாக பிபிசியில் 2016 நவம்பரில் தகவல் வெளியாகி இருக்கிறது.



2005-ம் ஆண்டில் நெதர்லாந்து சிறைகளில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 14,468 ஆக இருந்தது. 2015-ல் சிறை கைதிகளின் எண்ணிக்கை 8,245 ஆக குறைந்துள்ளது. நீதிமன்றங்களில் குற்றவாளியாக நிரூபணமாகும் நபருக்கு தண்டனையாக சிறை வாசத்தை அளிப்பதற்கு பதிலாக சமூக சேவை செய்வது, அபராதம் விதிப்பது, குற்றவாளிகளுக்கு எலெக்ட்ரானிக் குறியீடு உள்ளிட்ட நடைமுறைகளையும் மேற்கொண்டு உள்ளனர்.



குற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்து அதன் அடிப்படையில் அவர்களுக்கான தீர்வு அளிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் குற்றங்கள் செய்யாத நிலைக்கு மாற்றவும் செய்கின்றனர். கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது மட்டும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடர்ந்து கண்காணித்து குற்றங்கள் நிகழா வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், சிறைகள் மூடப்படுவதால் 2,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். போதிய கைதிகள் இல்லாத காரணத்தினால் சிறைகளுக்கு தேவையில்லாமல் செலவு செய்வதை விரும்பாத அரசாங்கம் சிறைகளை மூடி வருகிறது. தற்பொழுது நெதர்லாந்து மிகவும் பாதுகாப்பான தேசம் என அதன் ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…