YouTurn

திருநெல்வேலி வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என தினமணி வெளியிட்ட மெக்சிகோ வீடியோ

திருநெல்வேலி வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என தினமணி வெளியிட்ட மெக்சிகோ வீடியோ

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நெல்லை வெள்ளம்.. காண்போரை பதறவைக்கும் விடியோ

X link | Archive link 

விரிவான விளக்கம்

கடந்த 17ம் தேதி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாகப் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 



இந்நிலையில் திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ ஒன்றினை ‘தினமணி’ செய்தியாகப் பதிவிட்டுள்ளது. மேலும் பலர் அதே வீடியோவைதாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆடு மாடுகள்’  என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். 



உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரெம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அது 2020ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதைக் கண்டறிய முடிந்தது. 

இந்த வீடியோவை 2020, ஆகஸ்ட் 25ம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘மெக்சிகோ வெள்ளத்தில் பல மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன’ என்றுள்ளது. 



இதே போல் ஸ்பானிஷ் மொழியில் இயங்கக் கூடிய ‘uno tv’ என்னும் இணையதளத்திலும் இந்த வீடியோ குறித்த செய்தி 2020, ஜூலை மாதம் வெளியாகியுள்ளது. அச்செய்தியில் கம்போஸ்டெலா (Compostela) என்னும் பகுதியில் உள்ள "எல் கான்சல்" ஆற்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஆற்றில் மாடுகள் அடித்துச் செல்வதை வேறு கோணத்தில் எடுத்த வீடியோ ‘Conexão GeoClima’ என்னும் எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் மெக்சிகோ நயாரிட் (Nayarit) பகுதியில் நிகழ்ந்தது என்றுதான் கூறப்பட்டுள்ளது.



2020ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்ததை 2023ம் ஆண்டு திருநெல்வேலி வெள்ளம் எனத் தினமணி தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது. 

முடிவு : 

நம் தேடலில், திருநெல்வேலி வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ 2020ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க