YouTurn

திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளம் எனத் தவறாகப் பரவும் மொராக்கோ வீடியோ !

திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளம் எனத் தவறாகப் பரவும் மொராக்கோ வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மழையின் கோர பிடியில் நெல்லை.

Archive link

விரிவான விளக்கம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டியில் 17.12.2023 காலை 8.30 மணி முதல் 18.12.2023 காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 94.6 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த அதி கனமழையினால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 



இந்நிலையில் நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என  வீடியோ ஒன்றினை சவுக்கு சங்கர் ஆர்மி பக்கம் உட்படப் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.



உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோ கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அது கடந்த ஜூலை மாதம் மொராக்கோ நாட்டில் மௌலே பிராஹிம் (Moulay Brahim) என்னும் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 

திருநெல்வேலி வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் அதே வீடியோவை ‘Tasil I.N.D.I.A’ (@TasilJazz) என்னும் டிவிட்டர் பக்கத்தில் 2023, ஜூலை மாதம் 19ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மொராக்கோவில் அல் ஹவுஸ் (Al Haouz) என்னும் இடத்தில் உள்ள மௌலே பிராஹிம் பகுதியில் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

அந்த வீடியோவில் ‘Disaster News’ என்னும் வாட்டர் மார்க் உள்ளது. Disaster News டிவிட்டர் பக்கத்திலும் அதே வீடியோ மற்றும் தகவல் பதிவிடப்பட்டுள்ளது. 



மேலும் ‘morocco world newsஎன்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த வீடியோ மொராக்கோவில் எடுக்கப்பட்டதாகக் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



மௌலே பிராஹிம் என்னும் சிறு நகரத்தில் வெள்ளம் வந்து கார் அடித்துச் சென்றது தொடர்பாக ‘Your Weather’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய எந்த தகவலும் இன்னும் தெரியவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது. 



இவற்றில் இருந்து இது திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

நம் தேடலில், திருநெல்வேலி வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ பற்றிய தகவல் உண்மை அல்ல. அது கடந்த ஜூலை மாதம் மொராக்கோவில் உள்ள ஒரு நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க