YouTurn

நீட் தேர்விற்கு வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆதரவா ?

நீட் தேர்விற்கு வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆதரவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தனர், ஆளும் அதிமுக கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என கூறி இருந்தனர். காங்கிரஸ் கட்சி நீட்...

பரவிய செய்தி

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் நீட்டிற்கு ஆதரவாக வாதாடுவாரம். ஆனால், நாம் நீட் வேண்டாம் என்று தடுக்க காங்கிரஸ்க்கு ஓட்டு போட வேண்டுமாம்.

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தனர், ஆளும் அதிமுக கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என கூறி இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறும் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் நீட் வேண்டும், நீட்டிற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டன.

2017 ஆகஸ்ட் மாதம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நேரத்தில் தான், தமிழக அரசு நீட் தொடர்பான அவசர சட்டத்தை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு எதிராக வாதிட வேண்டும் என நீட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் வலிறுத்த வந்தாக அன்றைய செய்திகளில் வெளியாகி உள்ளது.

செய்தியாளருக்கு  நளினி சிதம்பரம் அளித்த பேட்டியில், " தமிழக அரசின் நீட்டிற்கு எதிரான ஓராண்டு விலக்கு கொண்டு வந்த அவசர சட்டத்தை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வாங்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்வோம். இந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.  முதலில் இந்த சட்டம் கிராமப்புற மாணவர்களுக்கானது என்பது ஏமாற்று வேலை.  இந்த சட்டம் தனியார் பள்ளியில் மாநிலக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்காக போடப்படுகிறது. 10 ஆண்டுகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்ட 30,000 மருத்துவ மாணவர்களில் 250 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள்.  அவசர சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் " என கூறி இருந்தார்.





2017-ல்  ஜூலை மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் , தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு சீட்களில் மாநில கல்விமுறையில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம், CBSE மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிராக,   CBSE மாணவர்களுக்கு ஆதரவான (W.P .17528/2017)வழக்கில்  வழக்கறிஞர் உமா என்பவரின் சார்பாக நளினி சிதம்பரம் ஆஜராகினார். அந்த வழக்கு 2017 ஜூலை 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.



அரசியல் கட்சினர் கூட நளினி சிதம்பரம் நீட் தேர்விற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாற்றியுள்ளார். நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில்  நீட் தேர்விற்கு ஆதரவாக வழக்கு தொடுத்தார் என எந்த செய்தியில் வெளியாகவில்லை. ஆனால், நீட் தேர்வில் வெற்றிப் பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பது உண்மையே !

சுருக்கமாக

2017  ஆகஸ்ட்டில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த அரசாணைக்கு எதிராக, நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.