YouTurn

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் வீரர் பாராட்டியதாக பரவும் போலி ட்விட்டர் பக்க பதிவு !

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் வீரர் பாராட்டியதாக பரவும் போலி ட்விட்டர் பக்க பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் பாராட்டு, தனது தோல்விகாக பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பும் கோரினார்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவே. இந்நிலையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பாகிஸ்தான் நாட்டின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டதாக இப்பதிவு இந்திய சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளிலும் கூட வெளியாகி வருகிறது.



உண்மை என்ன ? 


@ArshadNadeemPak எனும் ட்விட்டர் ஐடி பக்கத்தில் இருந்தே அப்படியொரு பதிவு வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த பதிவு வைரலான பிறகு நீக்கப்பட்டு கீழ்கண்டவாறு ட்வீட் பதிவிட்டு உள்ளது. இந்த ட்விட்டர் பக்கம் மே 2021-ல் தொடங்கப்பட்டு உள்ளது. 





Twitter link | Archive link 

எனினும், @ArshadNofficial எனும் ட்விட்டர் ஐடி-யில் அதே ட்வீட் பதிவு இடம்பெற்று இருக்கிறது. அதிகம் கவனம் பெறவில்லை என்பதால் இப்பதிவு நீக்கப்படவில்லை. இந்த ட்விட்டர் பக்கம் ஆகஸ்ட் 2020-ல் தொடங்கப்பட்டு இருக்கிறது.



Twitter link | Archive link 

ஆனால், பாகிஸ்தான் விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம் பெயரில் உள்ள இவ்விரு ட்விட்டர் பக்கங்களும் போலியானது, அவருடைய அதிகாரப்பூர்வ பக்கங்கள் அல்ல. பாகிஸ்தான் நாட்டின் தி டவ்ன் செய்தியின் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த அப்துல் காஃப்பர் என்பவர், @Arshadnadeem76 என்ற பக்கமே அர்ஷத் நதீம் உடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் என்பதை அவர் உறுதி செய்ததாக ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பகிர்ந்து இருந்தார். 



Twitter link | Archive link 

@Arshadnadeem76 என்ற பக்கத்தில் வைரலாகும் ட்வீட் போன்று எந்த பதிவுகளும் இல்லை. தன்னுடைய பெயரில் வேறு எந்த ட்விட்டர் பக்கங்களும் எனக்கு இல்லை என அர்ஷத் நதீம் முன்பே ஆகஸ்ட் 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார். 



Twitter link | Archive link 

இந்த ட்விட்டர் பக்கம் ஆகஸ்ட் 2020-ல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகே போலியான பக்கங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

முடிவு : 

நம் தேடலில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டதாக பரவும் ட்வீட் ஆனது போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க