YouTurn

என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை என நீரஜ் சோப்ரா கூறியதாக வதந்தி செய்தி !

என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை என நீரஜ் சோப்ரா கூறியதாக வதந்தி செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை ! மோடியை கிழித்த நீரஜ் சோப்ரா !



Youtube link | Archive link

விரிவான விளக்கம்

ஜப்பானில் நடைபெற்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றார். இந்நிலையில், என் வெற்றியைக் கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை என நீரஜ் கூறியதாக புதிய தமிழகம் நியூஸ் எனும் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியான 1.30 நிமிடங்கள் கொண்ட வீடியோ சுமார் 2.7 லட்சம் பார்வைகளை பெற்று உள்ளது. புதிய தமிழகம் நியூஸ் எனும் யூடியூப் சேனலில் வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோவில் " என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை " என நீரஜ் சோப்ரா கூறியதாக எந்த தகவலும் இல்லை. நீரஜ் சோப்ரா உடைய பயிற்சியாளர் உவ் ஹான் கூறியதாக வெளியான பதிவை வைத்து மட்டுமே வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள்.

பார்வையாளர்களை கவரவும், அரசியல் ரீதியாகவும் இப்படியொரு தவறான தலைப்பை தலைப்பை வைத்துள்ளனர். புதிய தமிழகம் நியூஸ் எனும் இந்த யூடியூப் சேனலில் திமுக ஆதரவான வீடியோக்களே பெரும்பாலும் உள்ளன.



2021 ஜூன் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு பயிற்சியாளர் உவ் ஹான் அளித்த பேட்டியில், " 58 வயதான ஜெர்மானியர், 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த ஒரே நபர் மற்றும் இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ராவின் எழுச்சிக்கு பின்னால் உள்ள பயிற்சியாளர் ஒலிம்பிக்கிற்கான பயிற்சி திட்டமிடப்படாதது மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறை பொருந்தாதது எனக் கூறியுள்ளார். ஆசிய மற்றும் காமென்வெல்த் தங்கப் பதக்க வெற்றியாளரை ஆதரிக்கும் விளையாட்டு ஊக்குவிப்பாளரான JSW ஸ்போர்ட்ஸ் தான் சோப்ரா கடந்த வாரம் ஐரோப்பாவிற்கு பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக பயணம் செய்ய ஒரே காரணம் " என நீண்ட பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். இவருடைய பழைய பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாவும் செய்தன.


நம் தேடலில், என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை என நீரஜ் சோப்ரா கூறியதாக புதிய தமிழகம் நியூஸ் எனும் யூடியூப் சேனல் வெளியிட்டது தவறானது. நீரஜ் சோப்ரா அப்படி எந்தவொரு கருத்தையும் கூறவில்லை, அவர் கூறியதாக வீடியோவில் கூட இடம்பெறவில்லை. தவறான செய்தியை பரப்புகின்றனர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க