YouTurn

ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசர் கருவியைப் பயன்டுத்தலாமா ?

ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசர் கருவியைப் பயன்டுத்தலாமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மிகச் சிறந்த புத்திசாலித் தனம். நெபுலைசர் சுவாச மெஷின்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைக்காக மக்கள் அல்லாடும் சூழ்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசர் கருவியை பயன்படுத்தலாம் என மருத்துவர் ஒருவர் பேசுவதாக 1.33 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.



வீடியோவில் இருப்பவர், " ஃபரிதாபாத் நகரில் உள்ள சர்வோதயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அலோக். நெபுலைசரை பயன்படுத்தி இரத்த ஆக்சிஜன் அளவை எப்படி அதிகரிக்கலாம் என விவரிக்கிறார். ஆக்சிஜன் நெருக்கடி உள்ள இன்றைய நாட்களில், இதன் மூலம் பலரின் உயிரை காக்க முடியும் " எனக் கூறி பிற மொழிகளிலும் இவ்வீடியோ வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

நெபுலைசர்கள் பெரும்பாலும் உயிரைக் காக்கும் மருந்துகளை வழங்க பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்துமா போன்ற மருத்துவ நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகளை உள்ளிழுக்க நெபுலைசர் தேவைப்படுகிறது.



Twitter link | Archive link 

இது தொடர்பாக சர்வோதயா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், " இந்த வீடியோவிற்கு எந்தவொரு ஆதாரமும், விஞ்ஞான ஆய்வும், மருத்துவ ஆலோசனைகளும் இல்லை.. இதற்கு ஃபரிதாபாத்தின் சர்வோதயா மருத்துவமனை எந்த வகையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை. தயவு செய்து உங்கள் மருத்துவ பயிற்சியாளரை அணுகாமல் இதுபோன்ற எந்தவொரு நடைமுறையையும் பின்பற்ற வேண்டாம். இது நோயை மோசமடைய வழிவகுக்கும் " எனக் கூறப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் மருத்துவர் இந்திய டுடேவிற்கு பேசி இருக்கிறார். தன்னுடைய பெயர் அலோக் சேத்தி, ஃபரிதாபாத் சர்வோதயா மருத்துவமனையில் இருதய துறையில் பணிபுரியும் ஜூனியர் மருத்துவர். இந்த வீடியோ கிளிப் வைரலானது முதலே இதுகுறித்து எச்சரித்து வருவதாகக் கூறி இருக்கிறார். ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசரை பயன்படுத்தலாம் எனும் கூற்றை மறுத்துள்ளார். நெபுலைசரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோவை ஒரு நபருக்கு அனுப்பியதாக கூறி இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், ஆக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றாக நெபுலைசர் கருவியை பயன்படுத்தலாம் என மருத்துவர் கூறுவதாக பகிரப்படும் வீடியோவை நம்பி நெபுலைசரை பயன்படுத்த வேண்டாம் என அறிய முடிகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களின் உண்மைத்தன்மை தெரியாமல் எதையும் முயற்சிக்க வேண்டாம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த தகவல்களை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க