யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Interstellar space-ல் விண்கல பயணத்தில் விண்கலங்களை கண்டுபிடிக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பும் முயற்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோல்டன் ஒலிப்பதிவு கருவியின் பதிவுகள் இணைக்கப்பட்ட Voyager விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக, பூமியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
பரவிய செய்தி
நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய சர்வேயர் விண்கலத்தில் தமிழில் பேசப்பட்ட ஆடியோ ஒலிப்பதிவு ஒன்றையும் சேர்த்து அனுப்பியதாம். இது வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பும் திட்டம்.

விரிவான விளக்கம்
Interstellar space-ல் விண்கல பயணத்தில் விண்கலங்களை கண்டுபிடிக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பும் முயற்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோல்டன் ஒலிப்பதிவு கருவியின் பதிவுகள் இணைக்கப்பட்ட Voyager விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனுடன் கூடுதலாக, பூமியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இசை மற்றும் 55 மொழிகளில் வாழ்த்துக்கள் அடங்கிய ஒலிப்பதிவும் இணைத்து உள்ளனர்.
விண்கலத்தில் பல்வேறு மொழியில் வாழ்த்துக்கள் சேகரிக்கும் பணியை நாசா cornell University-யின் Dr.Carl Sagan-னிடம் ஒப்படைத்தது. விண்வெளிக்கு செய்தி அனுப்பும் இந்த பணிக்கு பிறகு இதனைப் பற்றி Dr.Carl Sagan மூலம் “ Murmurs of earth “ என புத்தகம் உருவானது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொழிகள் cornell University-ஐ சேர்ந்தவர்களிடம் இருந்தும், அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்தும் பெறப்பட்டது. இப்பணியில் நாசாவின் தரப்பில் போதுமான நேரம் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் இருந்து பல மொழிகளில் வாழ்த்துக்கள் கூறும் ஒலிப்பதிவு இடம்பெற வேண்டும் எனவும், இந்திய துணைக்கண்டத்தில் உச்சரிக்கப்படும் ஆரம்பக்கால வாழ்த்துக்களான “ நமஸ்தே “ போன்ற வார்த்தைகள் இருக்க வேண்டும் என எண்ணியுள்ளனர்.
Interstellar space-க்கு நாசா செலுத்திய விண்கலத்தில் தமிழ் மொழி இல்லை. நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “ Voyager “ பற்றிய தகவலில் தமிழ் மொழி குறிப்புகள் இடம்பெறவில்லை.
தவறான தகவலை ஓர் கதையாக சித்தரித்து அச்சு பதிப்பில் வெளியிட்டு உள்ளனர்.

சுருக்கமாக
நாசாவின் மூலம் செலுத்தப்பட்ட Voyager விண்கலத்தில் 55 மொழியில் வாழ்த்துக்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள், இசை, பூமியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைத்து அனுப்பியுள்ளனர். அதில், தமிழ் மொழி இடம்பெறவில்லை. அதற்கான காரணத்தை காண்போம்.