யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒவ்வொரு ஆண்டும் மாத காலண்டர் வெளியிடுவது வழக்கம். இதில் இடம்பெறும் ஓவியங்களுக்கு என்று தனியாக ஒரு ஓவிய போட்டியும் நடத்தப்படுகிறது. இத்தகைய ஓவியப் போட்டியில் உலகின் எந்த நாட்டில் இருந்தும் மாணவர்கள் தங்களது கற்பனை திறனுடன் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான...
பரவிய செய்தி
நாசா வெளியிட்ட காலண்டரில் தமிழக மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் இருவர் ஓவியங்களை காண்பிக்கும் வீடியோவும் நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவான விளக்கம்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒவ்வொரு ஆண்டும் மாத காலண்டர் வெளியிடுவது வழக்கம். இதில் இடம்பெறும் ஓவியங்களுக்கு என்று தனியாக ஒரு ஓவிய போட்டியும் நடத்தப்படுகிறது.
இத்தகைய ஓவியப் போட்டியில் உலகின் எந்த நாட்டில் இருந்தும் மாணவர்கள் தங்களது கற்பனை திறனுடன் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான ஓவியப் போட்டியில் 192 நாடுகளில் இருந்து 4 முதல் 12 வயதுடைய பல லட்ச மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழகத்தின் பழனியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் செல்வ ஸ்ரீஜித், காவ்யா ஆகியோரின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. “ 2018 Children’s Artwork Calendar ” என்ற பெயரில் வெளியான காலண்டரின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதப் பக்கங்களில் இருவரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் மாதப் பக்கத்தில் இடம்பெற்ற மாணவன் செல்வாவின் ஓவியம், விண்வெளி வீரர்கள் தங்களது வீட்டில் இருந்து எதை எடுத்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. விண்வெளி வீரர்கள் இசைக் கருவிகள், MP3 players மற்றும் சின்ன பொம்மைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஓவியத்தில் கற்பனையோடு காண்பித்துள்ளான்.

நவம்பரில் இடம்பெற்ற மாணவி காவ்யாவின் ஓவியத்தின் தலைப்பு விண்வெளி உணவு ஆகும். விண்வெளி உணவு பற்றி மாணவின் ஓவியத்தில், விண்வெளி மையங்களில் உள்ள வீரர்களுக்கு பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகள் அனுப்பப்பட்டாலும், அவை பல நாட்களுக்கு முன்பே தயார்படுத்தப்பட்டவை.
எனவே அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க இயற்கை உணவுகளை வழங்க விண்வெளியில் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். விண்வெளியில் இயற்கை உணவை விவசாயம் செய்ய வேண்டும் என்பதை அழகாக ஓவியத்தில் காண்பித்துள்ளார்.
இத்தகைய காலண்டரில் இந்தியா (2), சிங்கப்பூர், இத்தாலி, மேரிலன்ட், கலிபோர்னியா (2), வாஷிங்டன் (2), ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ்-ஐ சேர்ந்த மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் கற்பனை திறனுடன் படைக்கப்பட்ட ஓவியங்களின் காலண்டரை விண்வெளியில் இருக்கும் விஞ்ஞானிகள் இருவர் கையில் பிடித்து காண்பிப்பது, பாராட்டுவது போன்ற வீடியோவையும் நாசா வெளியிட்டுள்ளது.
தமிழக மாணவர்களின் படைப்புகள் விண்வெளி வரை சென்றதையடுத்து, இத்தகைய திறமைமிக்க மாணவர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சுருக்கமாக
நாசாவின் 2018-ம் ஆண்டிற்கான மாத காலண்டரில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் காவ்யா என்ற இரு மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக மாணவர்களின் படைப்பாற்றல் விண்வெளி வரை சென்ற சாதனைப் படைத்துள்ளது.