YouTurn

நன்னிலம் மகளிர் நிலவுரிமை திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெற முடியுமா?

நன்னிலம் மகளிர் நிலவுரிமை திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெற முடியுமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஏழை ஆதி திராவிடர் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பரவிய செய்தி

‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் அனைத்து தரப்பு பெண்கள் பயன்பெறலாம்.



Instagram Link:

விரிவான விளக்கம்

‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ குறித்து ‘Finance with Harish’ என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் பேசிய இன்பூலுயன்ர், ‘இத்திட்டத்தின் கீழ் முதன்முதலில் நிலம் வாங்கும் பெண்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிலம் இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தில் முதல் முறையாக வீடு கட்ட விருப்பும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். அதன்படி வீடு கட்டுவதற்காக  மானியம் வழங்கப்படும்’ என்று பேசியுள்ளார்.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Harish v (@financewithharish)

 

உண்மை என்ன?

 

‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ தகவலை இணையத்தில் தேடினோம். ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் (TAHDCO)’ வலைத்தளத்தில் இதுபற்றி காணமுடிந்தது.


 

அதன்படி, ‘நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்’ என்பது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதை அறிந்து கொள்கிறோம். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் நபர் பட்டியல் சமூக பெண்ணாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விவசாய நிலம் எதையும் உடமையாக வைத்திருக்கக்கூடாது. அதேவேளை அவரது தொழில் விவசாயம் சார்ந்ததாக இருக்கவேண்டும்.

 

மேலும், இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலம் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவருடைய நிலமாக இருக்கக்கூடாது என்பதும் நிபந்தனை. அதாவது, நிலத்தை விற்பவர் கண்டிப்பாக பட்டியல் சமூகத்தை சேராதவராக (Non SC/ST) இருக்கவேண்டும்.


 

அதேபோல, ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறும் மானியத்தை ‘தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி’யின் வழகாட்டு நெறிமுறைகளின் படி கிணறு வெட்டவும், பாசனத்திற்காக மின்சார மோட்டார் பொருத்தவும் வசதி செய்து கொள்ள பயன்படுத்தலாம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு கட்டிக்கொள்ளலாம் என்று சொல்லப்படவில்லை.

 

இதிலிருந்து, இந்த திட்டம் பட்டியல் சமூகம் பெண்களுக்காக (ஆதி திராவிடர்) மட்டும் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதும் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக மானியம் பெறமுடியாது என்பதும் தெரியவருகிறது.

 

முடிவு:

 

ஆதி திராவிடர் மக்கள் (SC/ST) மட்டும் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை பொதுவான திட்டம் என்றும் அதன் கீழ் வீடு கட்ட மானியம் கிடைக்கும் என்றும் தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க