YouTurn

அனுமன் கோவிலில் இஸ்லாமியர் தொழுகை செய்ததாக வதந்திப் பரப்பிய ஆர்எஸ்எஸ் வாரப் பத்திரிகை !

அனுமன் கோவிலில் இஸ்லாமியர் தொழுகை செய்ததாக வதந்திப் பரப்பிய ஆர்எஸ்எஸ் வாரப் பத்திரிகை !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிரயாக்ராஜில் பஜ்ரங் பாலிக்கு சொந்தமான அனுமன் கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் தொழுகை செய்கிறார். அதனை இந்துக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.



Twitter link 

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ்(அலகாபாத்) பகுதியில் உள்ள அனுமன் கோவிலில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் தொழுகை செய்வதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. இதனை ஆர்.எஸ்.எஸ்க்கு சொந்தமான பஞ்சஜன்ய (Panchjanya) எனும் வாரப் பத்திரிகை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. எனினும், அந்தப் பதிவு இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது.



Archive Link



இந்த வீடியோவை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ORG செய்தி தளம் இந்தி தலைப்புடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள இளைஞரை அடையாளம் கண்ட பிரயாக்ராஜ் போலீசார், அவரது பெயர் வைபவ் திருப்பதி எனத் தெரிவித்து உள்ளனர். இது சம்பந்தமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் தாம் வஜ்ராசனா எனும் யோகாசனம் செய்ததாகவும், அதைப் பலர் தொழுகை செய்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும் கூறியுள்ளார்.



Twitter Link | Archive Link

வஜ்ராசனா என்பது இந்துக்கள் பிரார்த்தனை செய்யும்போது அல்லது யோகா செய்யும்போது அதிகம் பயன்படுத்துவது. மேலும், பலர் தனது தோற்றத்தை கண்டு இஸ்லாமியர் எனத் தவறாகப் புரிந்துகொண்டனர் என்று கூறியுள்ளார்.

கோவிலுக்குள் தொழுகை செய்வதாகப் பரப்பப்படும் செய்தி பொய் என்றும் இதனைப் பரப்புவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரயாக்ராஜ் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

முடிவு :

நம் தேடலில், பிரயாக்ராஜில் அனுமன் கோவிலில் இளைஞர் ஒருவர் தொழுகை செய்ததாக ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சஜன்ய(Panchjanya) பத்திரிகை மற்றும் வலதுசாரிகளால் பரப்பப்படும் செய்தி. இந்து ஒருவர் செய்யும் வஜ்ராசனா யோகாசனத்தை தொழுகை செய்வதாகத் தவறாகப் பரப்பப்படுகிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க