YouTurn

அமரன் திரைப்படத்தில் ‘நைனா’ என்ற வார்த்தை திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதா? உண்மை என்ன?

அமரன் திரைப்படத்தில் ‘நைனா’ என்ற வார்த்தை திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முகுந்தன் தனது அப்பாவை எப்படி அழைப்பாரோ அப்படித்தான் படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

படம் முழுக்க சிவகார்த்திகேயன் அவரது தந்தையை ‘நைனா’ என்று விளிப்பதும் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. 


Link

விரிவான விளக்கம்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியது. இத்திரைப்படம் மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.


அமரன் படத்தில் முகுந்தனாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் தனது தந்தையை ‘நைனா’ எனக் கூப்பிடுவார். தமிழ்நாட்டில் சென்னையிலிருந்த முகுந்தன் தனது தந்தையை நைனா என அழைப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டது திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது என ‘இந்து தமிழ் திசை’ தளத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. 


இதேபோன்று ராஜவேல் நாகராஜன், “படத்தின் கதாநாயகன் முகுந்த் வரதராஜன் பின்னணி என்னவாக மாற்றப்படுகிறது என்றால், தனது அப்பாவை நைனா எனக் கூப்பிடுகிறார். அந்த குடும்பம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த குடும்பமாகக் காட்டப்படாமல் வேறு சமூகமாகக் காட்சிப்படுத்துகிறார்கள். நைனா என அழைப்பதை வைத்து தெலுங்கு பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என ’பேசு தமிழா பேசு’ யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார் (7:27).


உண்மை என்ன?


இந்து தமிழ் திசையில் வெளியான கட்டுரை யார் எழுதியது என்கிற விவரம் அதில் இடம் பெறவில்லை. எனவே பரவக்கூடிய இத்தகைய கருத்துக்கள் பற்றிய உண்மையை அறிய, அமரன் தொடர்பாகப் படக்குழுவினர் பேசிய வீடியோக்களை ஆய்வு செய்தோம். 


அமரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய முழு வீடியோ ‘Turmeric Media’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


சிவகார்த்திகேயன் பேசத் தொடங்கும்போது நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூறுகிறார். அப்போது மேஜர் முகுந்தனின் குடும்பத்தினருக்கும் நன்றி சொல்கிறார். 


சிவகார்த்திகேயன் பேசுகையில் “மேஜர் முகுந்தன் குடும்பத்தினருக்கு நன்றி. வரதராஜன் அப்பா… உங்களை முகுந்தன் சார் செல்லமாக நைனா… நைனா என்று கூப்பிடுவார். நானும் உங்களை அப்படியே கூப்பிட்டுக் கொள்கிறேன் என்கிறார். அதனை ஏற்பது போல் வரதராஜனும் புன்னகைக்கிறார்.



அதாவது முகுந்தன் தனது அப்பாவை எப்படி அழைப்பாரோ அப்படித்தான் படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியமுடிகிறது. ஆனால், திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.


அமரன் திரைப்படத்துடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் குறித்த உண்மைகள் இதற்கு முன்னர் யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!

மேலும் படிக்க: இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி? பரவும் வீடியோ… உண்மை என்ன?

முடிவு: 


அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்தன் கதாபாத்திரம் அவரது அப்பாவை ‘நைனா’ என அழைப்பது திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது எனப் பரவும் தகவல் தவறானது. முகுந்தன் அவரது அப்பாவை ‘நைனா’ என்றுதான் அழைத்துள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க