யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பாஜகவில் இணைந்த காசியின் தந்தை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்ட கலாச்சார அணியின் துணை செயலாளராக நியமனம்.

Archive link

Archive link
விரிவான விளக்கம்
நாகர்கோவிலில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு சிறையில் உள்ள காசியின் தந்தை தங்கபாண்டியன் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும், அவரை கன்னியாகுமரி மாவட்ட கலாச்சார அணியின் துணை செயலாளராக நியமனம் செய்துள்ளதாகவும் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?
இளம்பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய நாகர்கோவிலை சேர்ந்த காசியை காவல்துறை 2௦2௦ம் ஆண்டு கைது செய்தது. குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள காசி மீதான வழக்கில் சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைதாகி சிறையில் இருந்த தங்கபாண்டியன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன் விசாரணக்கு வந்த போது, " சாட்சியங்களை மிரட்டக் கூடாது என நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளதாக " செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

அட குப்பைகள pic.twitter.com/ZEvULRx6Ak
— Jeni ☆ (@jenniifer_off) August 25, 2022

உண்மை என்ன ?
இளம்பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய நாகர்கோவிலை சேர்ந்த காசியை காவல்துறை 2௦2௦ம் ஆண்டு கைது செய்தது. குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள காசி மீதான வழக்கில் சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைதாகி சிறையில் இருந்த தங்கபாண்டியன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன் விசாரணக்கு வந்த போது, " சாட்சியங்களை மிரட்டக் கூடாது என நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளதாக " செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பாஜகவில் இணைந்ததாக பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், அவ்வாறு செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், தந்தி டிவி சேனலின் சமூக வலைதள பக்கங்களை ஆராய்கையில் , ஆகஸ்ட் 24ம் தேதி காசியின் தந்தைக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 24ம் தேதி தந்தி டிவியில் காசியின் தந்தைக்கு ஜாமின் வழங்கியதாக வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர். மேலும், காசியின் தந்தை திமுகவில் இணைந்தது போலவும் எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு :
நம் தேடலில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பாஜகவில் இணைந்ததாகவும், திமுகவில் இணைந்ததாகவும் பரப்பப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.