YouTurn

மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவிற்கு ஆதரவாக பேசினாரா ?

மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவிற்கு ஆதரவாக பேசினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பிறகு ஆளும் அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர். எனினும், சூர்யாவின் பேச்சிற்கு பிறகு தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் சென்றடைந்தது. இந்நிலையில்...

பரவிய செய்தி

சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது- மயில்சாமி அண்ணாதுரை.

விரிவான விளக்கம்

த்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பிறகு ஆளும் அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர். எனினும், சூர்யாவின் பேச்சிற்கு பிறகு தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் சென்றடைந்தது.

இந்நிலையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சூர்யாவிற்கு ஆதரவு அளிப்பது போன்ற கருத்தை கூறியதாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. அதில், " சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது " என மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூறியதாக இடம்பெற்று இருந்தது.

முகநூலில் ஒரு செய்திச் சேனலின் நியூஸ் கார்டு போன்று இருந்த அப்பதிவின் நம்பகத்தன்மை குறித்து ஆராய முற்பட்டோம். " சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை " என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுகையில் தந்தி டிவியில் மயில்சாமி அண்ணாதுரை குறித்த செய்தியே முதலில் வந்தது.



சென்னை தியாகராயர் நகரில் " வானம் வசப்படும் " அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி அண்ணாதுரை புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சு குறித்தும் பேசி இருந்தார்.



" கற்க கசடற என்று கூறிய மொழியில் கல்விக் கற்க கூடாது என சொல்வது, அந்த கல்வியைப் பற்றி எண்ணுகிற பொழுது எழுத்துக்கள் இல்லாத மொழியை படிக்க சொல்வது சரியானதே கிடையாது. ஏனென்றால், அந்த காலத்தில் கல்விக்கு அதிகாரமே வைத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், சில மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லை. அந்த மொழியில் பேச வேண்டும் என்பது எனக்கு சரியாகப்படவில்லை. இதனை பல இடங்களில் நான் கூறி இருக்கிறேன். என்ன ? சூர்யா சொல்வது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது, மயில்சாமி கூறியது வரவில்லை " என மயில்சாமி அண்ணாதுரை பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்திய குடிமகன் என்ற ஒரு தகுதி மட்டுமே கேள்வி எழுப்ப சூர்யாவிற்கு போதுமான தகுதி என்று லெனின் பாரதி ஆவேசமாக கூறியுள்ளார்.

இயக்குனர் லெனின் பாரதி கூறிய வார்த்தைகளுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் புகைப்படத்தை வைத்த காரணத்தினால் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும், மயில்சாமி அண்ணாதுரை சூர்யாவை எடுத்துக்காட்டாக வைத்து மொழிக் குறித்த தன் கருத்தை மேடையில் பேசி இருக்கிறார்.

முடிவு :

செய்தியின் நியூஸ் கார்டில் லெனின் பாரதி கூறிய வார்த்தைகளுக்கு மயில்சாமி அண்ணாதுரையின் புகைப்படத்தை வைத்ததே குழப்பத்திற்கு காரணம். எனினும், தமிழ் மொழி, கல்வி குறித்தும் மயில்சாமி அண்ணாதுரை பேசி இருக்கிறார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…