YouTurn

முத்தலாக் கொடுத்தவரின் நிலை எனத் தவறாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

முத்தலாக் கொடுத்தவரின் நிலை எனத் தவறாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முத்தலாக் குடுத்த முஸ்தபா நிலமை இதுதான்.எல்லாம் யோகி பாபா குடுத்த தையரியம். 


விரிவான விளக்கம்

முத்தலாக் கொடுத்த முஸ்தபா நிலைமை இதுதான் எனக் கூறி 17 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வீடியோவில், சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை தள்ளி செல்லும் இளைஞரை பின்னால் இருந்து பெண் ஒருவர் தாக்க தொடங்குகிறார், பின்னர் சாக்கடை நீரில் விழுந்து இருவரும் அடித்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் அடுத்த அடுத்த காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. ஆகையால், வீடியோவின் கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Ashishkhushnuma எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ பதிவாகி இருக்கிறது.



Instagram link 

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்விருவரும் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் பல உள்ளன. சமீபத்தில் பதிவான வீடியோக்கள் பலவும் கணவனை மனைவி கொடூரமாக அடிப்பது போன்ற காட்சிகளாகவே உள்ளன. மேலும், இப்பெண் அதே உடையில் இருக்கும் வேறு சில வீடியோக்களையும் பதிவிட்டு இருக்கிறார்.



கணவன் மனைவி அடித்துக் கொள்வது போல் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள். இதை மதரீதியாக உண்மையாக நடந்த சம்பவம் போன்று தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : கேரளாவில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு இந்துக்களிடம் பணம் பறிப்பு எனப் பரவும் போலி வீடியோ !

மேலும் படிக்க : முஸ்லீம் ஆணும், பெண்ணும் அயோத்தி ராமர் கோயிலுக்கு யாத்திரை செல்வதாகப் பரவும் போலி வீடியோ !

இதற்கு முன்பாகவும், இதேபோல் பல்வேறு போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் உண்மையாக நடந்த சம்பவம் போன்று தவறாகப் பரப்பப்பட்டு உள்ளன.

முடிவு : 

நம் தேடலில், முத்தலாக் குடுத்த முஸ்தபா நிலமை எனப் பரப்பப்படும் இருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ கணவன் மனைவி சேர்ந்து எடுத்த சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோ என்பதை அறிய முடிகிறது.  
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க