யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களில் பலருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களில் பலருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து டெல்லி முஸ்லீம்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பாகவே திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக ஓர் புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

Facebook link | archive link

உண்மை என்ன ?
சமூக வலைதளத்தில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 செப்டம்பர் 24-ம் தேதி திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link
" கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், அக்கட்சியின் துறைமுகம் பகுதி வட்டார துணைத்தலைவர் அலியாஸ்கர் ஷாகிர் தலைமையில் திமுகவில் இணைந்தனர். உடன்: மாவட்ட கழக செயலாளர் திரு. @PKSekarbabu எம்.எல்.ஏ. " என ட்வீட் பதிவில் கூறப்பட்டுள்ளது.
2019 செப்டம்பர் மாதம் சென்னை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு ஸ்டாலினை சந்தித்த பொழுது எடுக்கப்பட்டது என தவறாக பரப்பி வருகிறார்கள்.