YouTurn

இந்து கடவுள் பற்றி இஸ்லாமியர் தவறாகப் பேசினார் எனப் பரவும் பொய் தகவல் !

இந்து கடவுள் பற்றி இஸ்லாமியர் தவறாகப் பேசினார் எனப் பரவும் பொய் தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மேலே உள்ள முஸ்லீம் அவன் பேசியதை அவரவர் செல்லில் உள்ள அனைத்து குரூப்களிலும் பகிறுங்கள் அவன் கைது ஆகும் வரை.

X Post link 

விரிவான விளக்கம்

இஸ்லாமியர் ஒருவர் இந்துக்களைப் புண்படுத்தும் வகையில் இந்து கடவுள்களின் பெயரைக் கொண்டு கவிதை ஒன்றை வாசித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



அவர் வாசிக்கின்ற கவிதையில் இந்து மத கடவுளாகக் கருதப்படும் ராமர், சீதை மற்றும் அனுமனின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 



உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவில் ‘நீலம்’ ‘வானம்’ என்கிற இலச்சினை (Logo) இருப்பதைக் காண முடிகிறது. முக்கிய வார்த்தைகள் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘நீலம்’ இணையதளத்தில் ‘மலக்குழி மரணம்’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் வாசிக்கக்கூடிய கவிதையும் நீலம் இணையத்தளத்தில் உள்ள கவிதையும் ஒன்றாக உள்ளது. மேலும் அக்கவிதையை எழுதியவரது பெயர் ‘விடுதலை சிகப்பி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த (2023) ஏப்ரல் 30ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மலக்குழி மரணம்’ என்ற தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி இக்கவிதையை வாசித்துள்ளார். 

இக்கவிதை இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீனும் வழங்கியது.



இது குறித்துக் கடந்த மே மாதம் ‘பிபிசி தமிழ்’ வெளியான கட்டுரையில் விடுதலை சிகப்பியின் இயற்பெயர் விக்னேஸ்வரன்’ என்றுள்ளது. இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ‘இந்து தமிழ் திசையில்’ வெளியான செய்தியிலும் விக்னேஸ்வரன் என்றே அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை இஸ்லாமியர் என்று பொய்யான தகவல் மூலம் மத வெறுப்பைப் பரப்புகின்றனர். 



மேலும் படிக்க : திமுக ஆட்சியில் பிராமணர்களைத் தூய்மை பணியாளர்களாகச் சித்தரிப்பு எனப் பரவும் பழைய வீடியோ !

இக்கவிதை சர்ச்சையாகிய போது திமுக ஆட்சியில் பிராமணர்களைத் தவறாகச் சித்தரித்து வீடியோக்கள் எடுக்கப்படுவதாகப் பழைய வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பரப்பினர். அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டது. 

முடிவு : 

நம் தேடலில், இஸ்லாமியர் ஒருவர் இந்து கடவுள்கள் பற்றி தவறாகப் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அவரது இயற்பெயர் விக்னேஸ்வரன் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க