யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முஸ்லீம் பழ வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பழங்களை அடிக்கி வைக்கும் வீடியோவில் தன் விரல்களை கொண்டு எச்சில் செய்து பழங்களை எடுத்து வைக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இந்திய அளவில் அதிகம் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில், முஸ்லீம் வியாபாரிகளிடம் எதையும் வாங்காதீர்கள் என்ற...
பரவிய செய்தி
நம்ம பாய் எவ்வளவு அழகா எச்சி தொட்டு பழத்தை வெயில்ல இருந்து கருகி போகாம பார்த்துகிறாரு பாருங்க. கொரோனாவ எப்படி பரப்புறாங்க பாருங்க.

Facebook link | archived link

Facebook link | archived link
விரிவான விளக்கம்
முஸ்லீம் பழ வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பழங்களை அடிக்கி வைக்கும் வீடியோவில் தன் விரல்களை கொண்டு எச்சில் செய்து பழங்களை எடுத்து வைக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இந்திய அளவில் அதிகம் வைரலாகி வருகிறது.
குறிப்பாக தமிழில், முஸ்லீம் வியாபாரிகளிடம் எதையும் வாங்காதீர்கள் என்ற வாசகத்துடன் இவ்வீடியோ அதிகம் பதிவிட்டு வருகிறது. மேலும், இவர் எச்சில் மூலம் கொரோனாவை பரப்புவதாகவும் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே, முஸ்லீம்கள் கொரோனாவை பரப்பி வருவதாக பல்வேறு தவறான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பிய நிலையில் இந்த வீடியோவும் அதே கருத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
முஸ்லீம் பழ வியாபாரி பழத்தினை எச்சில் செய்யும் டிக்டாக் வீடியோ வட மாநிலங்களில் எடுக்கப்பட்டதாக காட்சி அளிக்கிறது. இது குறித்து தேடுகையில், இந்த வீடியோ எடுக்கப்பட்டது மத்தியப் பிரதேச மாநிலம் என்றும், வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த பழ வியாபாரி தற்போது கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் உள்ளார்.
வீடியோவில் இருக்கும் முஸ்லீம் வியாபாரியின் பெயர் ஷேரு. சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான பிறகு மத்திய பிரதேசதின் ராய்சென் மாவட்ட போலீஸ் ஏப்ரல் 3-ம் தேதி ஷேருவை கைது செய்து ஐபிசி 269, 279 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

இது குறித்து ராய்சென் மாவட்ட எஸ்பி மோனிகா சுக்லா, " இந்த வீடியோ பிப்ரவரி 16-ம் தேதி எடுக்கப்பட்டு தற்போதும் வைரலாகி வருகிறது. வீடியோவை பதிவேற்றம் செய்த நபரை கண்டறிந்து, பின்னர் வைரல் வீடியோவில் இருக்கும் நபரை பிடித்துள்ளோம். வழக்கு பதிவுசெய்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது, அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கண்டறிந்து வருகிறோம். மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் சோதனையும் மேற்கொள்ள உள்ளதாக " தி குய்ன்ட் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், " வைரல் வீடியோவில் இருப்பது போன்று நான் ஏதும் செய்யவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. நான் அழுகிய பழங்களை தனியாக எடுத்து மட்டுமே வைத்தேன் " என ஷேரு தெரிவித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மேற்கொண்டு விசாரணை நடப்பதாகவும், ஷேருவிற்கு கொரோனா இருக்கிறதா என சோதனை செய்ய உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : முஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ !
மத்தியப் பிரதேசத்தில் பிப்ரவரி 16-ம் தேதி எடுக்கப்பட்ட முஸ்லீம் பழ வியாபாரியின் வீடியோவே தற்போது இந்திய அளவில் கொரோனா வைரஸ் செய்தியுடன் பரவி வருகிறது. சிலர் முஸ்லீம் பழ வியாபாரியை நிஜாமுதீன் மாநாட்டுடன் தொடர்புபடுத்தியும் தவறாக பரப்பி வருகிறார்கள். போலீஸ் தரப்பில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதையும் இணைக்க உள்ளோம்.