YouTurn

பெற்ற மகளையே திருமணம் செய்து கொண்ட தந்தை !

பெற்ற மகளையே திருமணம் செய்து கொண்ட தந்தை !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

2007-ல் மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி எனும் மாவட்டத்தில் உள்ள கசியாஜோரா எனும் கிராமத்தில் வசித்து வந்த 36 வயதான அஃபாஸுதீன் அலி என்பவர் தன்னுடைய 15 வயது மகளையே திருமணம் செய்து கொண்டு, கருவுறச் செய்துள்ளார். தன்னுடைய செயலுக்கான அனுமதியை அல்லாஹாவிடம் பெற்றதாக தெரிவித்து இருந்தார். இதற்கு...

பரவிய செய்தி

முஸ்லீம் நபர் ஒருவர் தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டு, கருவுறச் செய்து உள்ளார். அல்லாவின் அனுமதி பெற்றதாக அஃபாஸுதீன் கூறியுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு அவரின் மனைவியே சாட்சி.

விரிவான விளக்கம்

2007-ல் மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி எனும் மாவட்டத்தில் உள்ள கசியாஜோரா எனும் கிராமத்தில் வசித்து வந்த 36 வயதான அஃபாஸுதீன் அலி என்பவர் தன்னுடைய 15 வயது மகளையே திருமணம் செய்து கொண்டு, கருவுறச் செய்துள்ளார். தன்னுடைய செயலுக்கான அனுமதியை அல்லாஹாவிடம் பெற்றதாக தெரிவித்து இருந்தார்.

இதற்கு அஃபாஸுதீன் உடைய மனைவி சஹினா மட்டுமே சாட்சியாகும். அஃபாஸுதீன் அலி தன் மகளை திருமணம் செய்து கொண்டது கசியாஜோரா கிராமத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த பெண் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிய வந்தது. அதன் பின்னே அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த செய்தி வெளிவந்தது.



கிராமத்தில் இருந்தவர்கள் கோபமடைந்து அவர்களை வார்த்தைகளால் தாக்கி உள்ளனர். பின்னர் இச்செய்தி காவல்துறைக்கு தெரிய வந்து பனேர்கட் போலீஸ் அஃபாஸுதீன், அவரின் மனைவி சஹினா மற்றும் 15-வயது மகளை கைது செய்தனர். அவர்களை எஸ்.டி.ஓ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர்.

" ஆனால், அஃபாஸுதீன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவொரு புகாரும் பதியவில்லை என்பதால் வேறுவழியின்றி அவர்களை நீதிபதி விடுதலை செய்தார் ".



தற்பொழுது அந்த செய்தி உடன் தவறான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். செய்தித்தாளில் இருக்கும் புகைப்படமே சரியானவை. ஆனால், மற்ற இரு புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஈரான் மசோதா :

2013-ல் ஈரானில் தந்தையானவர் 13 வயது அடைந்த தன்னுடைய அல்லது தத்தெடுத்த பெண் பிள்ளையை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி அளிக்கப்பட்டது. பெண் பிள்ளைகளின் திருமண வயது 13, ஆண் பிள்ளைகளின் திருமண வயது 15 ஆக கூறப்பட்டுள்ளது.

முடிவு :



அஃபாஸுதீன் தன் சொந்த மகளையே கடவுளின் பெயரைக் கூறி திருமணம் செய்து கொண்ட செய்திகள் 2007 நவம்பர் 20-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி உள்ளது. அந்த செய்தியை தற்பொழுது எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

சுருக்கமாக

செய்தித்தாளில் இருக்கும் புகைப்படங்களே சரியானவை. அதனை வைத்து பதிவிட்ட மீம்களில் இருக்கும் பிற புகைப்படத்திற்கும், செய்திக்கும் தொடர்பில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…