YouTurn

'முருக மாநாட்டிற்கு பிறகு கோவில் ரசீதுகளில் முருகன் படம்' எனப் பரவும் வதந்தி!

'முருக மாநாட்டிற்கு பிறகு கோவில் ரசீதுகளில் முருகன் படம்' எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு கோயில்களில் வழங்கும் ரசீதுகளில் இந்துசமய அறநிலையத்துறையின் இலச்சினைக்கு பதிலாக முருகனின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் தவறானவை.

பரவிய செய்தி

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்பு.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

முருக பகதர்கள் மாநாடு சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


இந்நிலையில் பவன் கல்யாண் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறார், அவர் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் கோவில்களில் வழங்கப்படும் ரசீதுகளில் முருகன் படம் இடம்பெற்றுள்ளதை பாருங்கள் என்று கூறி இரண்டு ரசீதுகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ஒப்பீடு செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Legend Pawankalyan (@legendpawankalyan)


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தினை ஆய்வு செய்து பார்த்ததில், முதலில் இருப்பது திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வழங்கப்பட்ட ரசீது என்பதை, ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவிலின் பெயர் மற்றும் கோவிலின் எண் (TM001596) ஆகியவற்றைக் கொண்டு உறுதிபடுத்த முடிந்தது. 



அதே போன்று இரண்டாவது ரசீதையும் ஆய்வு செய்ததில், அது சென்னை வடபழநி முருகன் கோயிலில் வழங்கப்பட்ட ரசீது என்பதை அறிய முடிந்தது. 



இந்நிலையில் இருவேறு கோவில்களின் ரசீதுகளை ஒன்றாக இணைத்து, ஒரே கோவிலின் ரசீது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 



மேலும் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு வடபழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்ட ரசீதை ஆய்வு செய்ததில், மாநாடு நடைபெறுவதற்கு முன்பு இருந்தே அங்கு வழங்கப்படும் ரசீதுகளில் முருகன் படம் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிந்தது. 


முடிவு: 


நம் தேடலில், மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பிறகு கோயில்களில் வழங்கும் ரசீதுகளில் இந்துசமய அறநிலையத்துறையின் இலச்சினைக்கு பதிலாக முருகனின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க