யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே கேரளாவில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதனை தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டையடுத்து, முருக பக்தர்கள் வரிசையாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்வதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“ponnukuttai_offical“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2024-ல் இருந்தே கேரளாவில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இது தற்போது நடைபெற்ற முருகன் மாநாட்டையடுத்து எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
மேலும் படிக்க: முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பரவும் பழைய வீடியோ!
இதற்கு முன்பும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல செய்திகள் இதே போன்று தவறாகப் பரவின. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் மாநாட்டையடுத்து, முருக பக்தர்கள் வரிசையாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் காட்சி என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.