
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
Can't believe he is #ArnabGoswami
If it's real.....Maharashtra Govt has asked for the dooms day.
I m terribly Perturbed.#महाराष्ट्र_सरकार_बरखास्त_करो @TajinderBagga pic.twitter.com/80l4iwJGq1
— Gaurav Goel (@goelgauravbjp) November 4, 2020
Twitter Archive link
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் கெளரவ் கோயல் என்பவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது உண்மையாக இருந்தால் மகாராஷ்டிரா அரசு அழிவு நாளை வேண்டுகிறது எனக் குறிப்பிட்டு இவ்விரு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
Where are u? @narendramodi @PMOIndia @AmitShah @HMOIndia
Sushant murders are roaming free & common people demanding justice are treated like terrorists.
Even terrorist would have better human rights !#IndiaWithArnab#IndiastandswithArnab#ArnabWeAreWithYou#BlackDay4Press pic.twitter.com/DpfDQZklkx
— Vaishali-I am Sushant-राष्ट्रवादी (@Vee_ItIs) November 4, 2020
உண்மை என்ன ?
மும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அன்வே நாயக் என்பவர் 2018-ல் தற்கொலை செய்து கொண்ட போது எழுதி வைத்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் நேற்று(நவம்பர் 4-ம் தேதி) கைது செய்து அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகின. கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் அர்னாபை போலீஸ் இழுத்து சென்ற காட்சி செய்திகளில் வெளியாகின. ஆனால், போலீஸ் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் கொடூரமாக தாக்கியதாக இரு புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவ்விரு புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜனவரி 10-ம் தேதி நியூஸ் 18 இணையதளத்தில் " Legs Held Up, Shoe on Face, Belt Buckle Beating: On Cam, UP Police's Punishment for 'Phone Thief' " எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இப்புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் தேவ்ரியா மாவட்டத்தில் செல்போனை திருடிய நபரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஷூ காலால் மிதித்து, பெல்ட்டால் அடித்து கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாகியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
This is the @deoriapolice , viciously assaulting a young man accused of mobile theft by his neighbour , inside a police station. One cop tries to smash the man's face with his boot , the man is hit multiple times with a belt as other cops pin him down . Three cops suspended ... pic.twitter.com/hzDplXrDv0
— Alok Pandey (@alok_pandey) January 10, 2020
Twitter link | Archive link
Bar & Bench எனும் யூடியூப் சேனலில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் கைது செய்த முழு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திருடியதாக கூறப்படும் நபரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கிய காட்சியை மும்பை போலீஸ் அர்னாபை தாக்கிய காட்சிகள் என தவறாக பரப்பி வருகிறார்கள்.