YouTurn

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டதா ?

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தில் இன்றுவரை பேருந்து நிலையம், புதிய கட்டிடங்கள், பாலங்கள் , சாலைகள் மற்றும் அரசு சார்ந்த பலவற்றிற்கு முன்னாள் மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டி வருகின்றனர். இத்தகைய காலக்கட்டத்தில் மும்பை பெருநகரில் உள்ள துறைமுகத்திற்கு பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது...

பரவிய செய்தி

மும்பை துறைமுகத்திற்கு முதலாம் ராஜேந்திர சோழனின் பெயரை சூட்டியது மத்திய அரசு.

விரிவான விளக்கம்

தமிழகத்தில் இன்றுவரை பேருந்து நிலையம், புதிய கட்டிடங்கள், பாலங்கள் , சாலைகள் மற்றும் அரசு சார்ந்த பலவற்றிற்கு முன்னாள் மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டி வருகின்றனர்.



இத்தகைய காலக்கட்டத்தில் மும்பை பெருநகரில் உள்ள துறைமுகத்திற்கு பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், அம்மாநில முதல்வர், ஆளுநர் பங்குபெற்ற அரசு நிகழ்ச்சி படம் இச்செய்திக்கு பக்கபலம்.

சோழப் பேரரசர்களில் கடல்கடந்து பல தேசங்களை வென்று தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமை 1000 ஆண்டுகளை கடந்து நிலைத்து நிற்கிறது.



இத்தகைய பெருமைமிக்க பேரரசரை பெருமைப்படுத்த 2016 ஆம் ஆண்டு மும்பையின் "  Mazgon Docks "எனும் கப்பல்கள் கட்டமைக்கும் நிறுவனத்திற்கு (அரசு நிறுவனம்) கம்பீரமான முதலாம் ராஜேந்திர சோழனின் உருவப்படம் அர்பணிக்கப்பட்டது.



" 2016 செப்டம்பர் மாதம் நடைபெற்ற Solemn நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜேந்திர சோழனின் திருவுருவப் படத்தை வழங்க நிகழ்ச்சியின் தலைவர் தருண் விஜய் மற்றும் Mazgon Docks-ன் முன்னாள் தலைவர் ராகுல் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் "“ ஆயிரம் ஆண்டுகள் ஆகினும் முதலாம் ராஜேந்திரனின் நினைவுகள் நீங்காமல் இருக்க காரணம் தேசிய ஒற்றுமை மட்டுமே அல்ல இந்திய பெருங்கடலை அமைதி பகுதியாக நிலைநிறுத்த முன்னுதாரணமாக இருந்தவர் “ என தருண் விஜய் உரையாற்றினர்.

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டவில்லை, ஆனால் அவரின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது.

சுருக்கமாக

மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டவில்லை, ஆனால் அவரின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.