YouTurn

Mr.bean கார் விபத்தில் இறந்து விட்டாரா ?

Mr.bean கார் விபத்தில் இறந்து விட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நகைச்சுவை மூலம் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் Mr.bean என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் Rowan atkinson. தன் திறமையால் பல ஆங்கில படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இவர் பிரபலமாக காரணமாக இருந்தது Mr.bean என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியே ! படங்களாகவும், தொலைக்காட்சி...

பரவிய செய்தி

Mr.bean என்ற நகைச்சுவை நிகழ்ச்சி புகழ் Rowan atkinson தனது 62 வயதில் கார் விபத்தில் இறந்துவிட்டார்.

விரிவான விளக்கம்

நகைச்சுவை மூலம் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் Mr.bean என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்  Rowan atkinson. தன் திறமையால் பல ஆங்கில படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் பிரபலமாக காரணமாக இருந்தது Mr.bean என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியே ! படங்களாகவும், தொலைக்காட்சி தொடராகவும், கார்டூன் நிகழ்ச்சியாகவும் mr.bean நிகழ்ச்சி வெளியாகி அதன் மூலம் அதிகம் பிரபலமடைந்தவர். 63 வயதான Rowan atkinson கார் விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி தவறான செய்திகள் இணையத்தில் உலாவுகின்றன.

சமூக வலைத்தளங்களில் " FOX BREAKING NEWS " என்ற தலைப்பில் ஜூலை 17, 2018-ல் " Rowan atkinson" சண்டைக் காட்சியின் போது நடந்த கார் விபத்தில் இறந்து விட்டதாகவும், அதனுடன் ஒரு இணையதளத்தின் லிங்க்-கும் இணைக்கப்பட்டுள்ளது. fox news தரப்பில் அப்படியொரு செய்தியே வெளியாகவில்லை.  பல நாடுகளில் பரவி வரும் இந்த வதந்தியுடன் இருக்கும் லிங்கை கிளிக் செய்தால் இணையதளம் ஒன்றிற்கு செல்கிறது. இதனால் வைரஸ் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

" மேலும், அவர் இறந்த வீடியோ காட்சி என்று வீடியோ லிங்க் ஒன்றும் சில பதிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்வதால் பொருட்களை விற்பனைகள் செய்யும் தளத்திற்கோ அல்லது உங்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹக் செய்ய வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன ".  இது குறித்து ஆன்டி-வைரஸ் நிறுவனம் McAfee  கூறுகையில் மக்களை குறி வைத்து ஏமாற்றுபவர்களால் (Scammers ) பிரபலமானவர்களை வைத்து பரப்பப்படும் இவ்வகை  வதந்திகளோடு தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களை கொண்டு தனிப்பட்ட தரவுகளை திருடுகிறார்கள் என்றனர்.

இதுவரை ஒன்பது முறை Rowan atkinson இறந்து விட்டதாக கூறி தவறான செய்திகள் இணையத்தில் அதிகமாக பரவி உள்ளன . ஜூலை 2016 ஆண்டு மன அழுத்தம் காரணமாக என்றும், ஜூலை 2017-ல் காரி விபத்தில், ஜூலை 2018-ல் மீண்டும் கார் விபத்தில் இவர் இறந்து விட்டார் என தவறான செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபலமானவர்களை இறந்து விட்டதாக கூறி பல தவறான செய்திகளை இணையத்தில் பரப்ப பலர் முனைப்பாக உள்ளனர் . பெரும்பாலும் பிரபலமானவர்களை குறி வைத்து இவ்வாறான வதந்திகள் பரவுகின்றன.

கூடுதல் தகவல் :



2021 மே 2-ம் தேதி Mr.Bean புகழ் Rowan atkinson இறந்து விட்டதாக கூறி மீம் பதிவிட்டு இருக்கிறார்கள். இதுவும் வதந்தியே. 2018-ல் பரப்பிய அதே மீம் பதிவில் 2021 என எடிட் செய்து மீண்டும் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

சுருக்கமாக

சிறந்த நகைச்சுவை நடிகர் Rowan atkinson கார் விபத்தில் இறந்து விட்டதாக பரவிய செய்தி வதந்தியாகும். ஒவ்வொரு ஆண்டும் Mr.நடிகர் இறந்து விட்டார் என்று வதந்திகள் தொடர்ச்சியாக பகிரப்படுகிறது. சில காரணங்களுக்காக வேண்டுமென்றே இந்த செய்தியை பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.